எகேலியசு மலை
எகேலியஸ் மலை (Aigaleo அல்லது Egaleo, கிரேக்கம்: Αιγάλεω , பழங்காலத்தில் பொய்கிலோன் ஓரோஸ் (Ποικίλον Όρος) என்று அறியப்பட்டது) கிரேக்கத்தின் அட்டிகாவில் உள்ள ஏதென்சில் உள்ள ஒரு மலையாகும். இது ஏதென்ஸ் சமவெளிக்கு மேற்கே, எலியூசிசின் தென்கிழக்கே, சலாமிஸ் தீவின் கிழக்கே அமைந்துள்ளது. மலையின் பெரும்பகுதி பாறைகள் (சுண்ணாம்புக் கல்) ஆகும். இது ஹைமெட்டஸ் மலையைவிட விட உயரத்தில் குறைவானது. எகேலியஸ் மலையில் உள்ள காடுகளின் பெரும்பகுதி டாப்னி மடாலயத்தின் வடக்கே அமைந்துள்ளது. இதன் வடக்கு பகுதியில் ஒரு பூங்காவும் உள்ளது. சலாமிஸ் விரிகுடாவில் கிரேக்கப் படைகளுக்கும் பாரசீக படைகளுக்கும் இடையில் நடந்த சலாமிஸ் போரைக் காண ஏதுவாக இந்த மலையின் மீது பாரசீக மன்னர் செர்க்ஸஸ் தனியாக அரியாசனத்தை அமைத்து தன் படையின் போர்த்திறத்தை பார்வையிட்டார். [1] இந்த மலையைச் சுற்றி பெரமா, டிராபெட்சோனா, நிக்காயா, கோரிடாலோஸ், நெடுஞ்சாலை, சைதாரி ஆகிய நகரங்களும், இடங்கள் அடங்கியுள்ளன. ஏதென்சு மெட்ரோ 2002-2003 இல் இருந்து இந்தப் பகுதிகளை இணைக்கிறது. ஜி.ஆர்-8 மற்றும் கெரட்சினியை இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை இந்த மலைத்தொடர் வழியாக செல்கிறது. ஸ்கரமங்கங்களின் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் வடக்கில் இந்த மலையின் உள்ளன. மலையின் வடமேற்குப் பகுதியில் உள்ள புதிய புறவழிச்சாலையானது அட்டிகி ஓடோஸ் சூப்பர்ஹைவே அமைப்பின் ஒரு பகுதியாகும். இது 2004 சனவரியில் திறக்கப்பட்டது. இது மலையின் வடமேற்கே உள்ள சூப்பர்ஹைவேயுடன் சேர்த்து 2004 சனவரியில் திறக்கப்பட்டது. குறிப்புகள் |
Portal di Ensiklopedia Dunia