எக்சா போரேன்(12)
எக்சா போரேன்(12) (Hexaborane(12)) என்பது B6H12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அறுபோரேன்(12) என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் போரேன்கள் குடும்பத்தில் ஒரு தெளிவற்ற உறுப்பினராக உள்ளது. பெரும்பாலான மற்ற போரேன் ஐதரைடுகளைப் போலவே இதுவும் நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. தீப்பற்றி எரியக்கூடியதாகவும் விரைவில் நீராற்பகுப்பு அடையக் கூடியதாகவும் உள்ளது. BnHn+6, என்ற வாய்ப்பாட்டு அமைப்புடன் சி2 சமச்சீர் குழுவினை இச்சேர்மத்தின் மூலக்கூற்று கட்டமைப்பு உறுதி செய்கிறது. சிலந்திக் கொத்து மூலக்கூறு அமைப்பில் வகைப்படுத்தப்படும் இம்மூலக்கூறில் போரானின் ஆறு இடங்களும் B8H2− வால் மூடப்பட்ட சட்டமாகப் பொருந்தியுள்ளன. தயாரிப்புகொத்து விரிவாக்க முறையில், பென்டாபோரேன் – 9 இனினுடைய இணை காரமான B5H−8, இலிருந்து எக்சா போரேன்(12) தயாரிக்கப்படுகிறது [1]. LiB5H8 + 1/2 B2H6 → LiB6H11 LiB6H11 + HCl → B6H12 + LiCl மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia