எசரிக்கியா கோலை ஓ104:எச்4எசரிக்கியா கோலை ஓ104:எச்4 குடலியக்குருதிப்பெருக்கை ஏற்படுத்தும் வகையைச் சேர்ந்த அரிதாகக் காணப்படும் எசரிக்கியா கோலை பாக்டீரியாவாகும், இது 2011 ஈ.கோலை ஓ104:எச்4 தொற்று நிகழ்வுக்கு காரணமானது.[1] தெளியவியல் (serology) வகைப்பாட்டில் "ஓ" (O) என்பது பாக்டீரியாவின் கலச்சுவர் கொழுப்புப்பல்சக்கரைட்டுப் பிறபொருள், "எச்" (H) என்பது கசையிழைப் பிறபொருள் ஆகும். மரபணுத்தொகை வரிசை முறைப்படுத்தற்படி இவை புதிய மீ-நச்சுமை வகையைச் சார்ந்த பாக்டீரியாக்கள் என பீக்கிங் மரபணுத்தொகை நிலையத்தில் அறியப்பட்டது.[2][3] 2011 திடீர் நிகழ்வுக்கு முன்னர் ஓ104:எச்4 வகையால் ஏற்பட்டிருந்த ஒரே ஒரு சம்பவம் 2005ம் ஆண்டு கொரியாவில் ஒருபெண்ணில் உண்டாகிய சிவப்பணுச்சிதைவு சிறுநீரகச் செயலிழப்பு கூட்டறிகுறியாகும்.[4] ஓ104:எச்4 வகையைச் சார்ந்ததாக நம்பப்படும் வகையொன்றால் 1994இல் மொன்டானாவில் நிகழ்ந்த குருதிப்பெருக்கு குடல் அழற்சி ஏற்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia