எச்1பி நுழைவிசைவுஎச்1பி நுழைவிசைவு என்பது, ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குள் நுழைவதற்கு, தற்காலிக வேலையாட்களுக்கு[1] வழங்கப்படும் ஒரு வகையான நுழைவிசைவு ஆகும். இவ்வகையான நுழைவிசைவு வெளி நாடுகளிலிருந்து சிறப்புப் பணிகளை செய்ய அமெரிக்க நாடுகளுக்கு வருவோருக்கு வழங்கப்படுகிறது. அறிவியல், பொறியியல், மருத்துவம், உடற்கல்வி, கணிதம், சமூக அறிவியல், கணக்கியல், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளங்கலை அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருப்போருக்கு இவ்வகையான நுழைவிசைவு வழங்கப்படும். எச்1பி நுழைவிசைவு பெற தகுதிகள்ஐந்து[2] முக்கியமான தகுதிகள் எச்1பி நுழைவிசைவு பெற தேவைப்படுகின்றது.
காலக்கெடுஎச்1பி நுழைவிசைவு வழக்கமாக மூன்று ஆண்டுகள் வரையில் வழங்கப்படுகிறது. அதன்பிறகு இரண்டு ஆண்டுகளும், தேவைப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரையிலும் நீட்டிக்க இயலும்[3]. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பாதுகாப்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கு அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதி எண்ணிக்கைஒரு ஆண்டுக்கு 65,000 நபர்களுக்கு எச்1பி நுழைவிசைவு வழங்கப்படுகிறது. கூடுதலாக 20,000 முதுகலை பட்டதாரிகளுக்கு, இவ்வகையான நுழைவிசைவு புதிதாக வழங்கப்படும். பிரதி ஆண்டு அக்டோபர் முதல் தேதி அமெரிக்க கணக்கு வருடம் தொடங்குகிறது, அது முதல் ஆறு மாதங்களுக்கு உள்ளாகவே இவ்வகையான நுழைவிசைவு வழங்கப்படுகிறது; ஆயினும் ஏப்ரல் 1 முதல் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள்ஏப்ரல் 1 முதல், எச்1பி நுழைவிசைவிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. 2016-ம் ஆண்டு முதல் பணிசெய்வதற்காக 2,33,000 விண்ணப்பங்கள் வந்திருந்தன[4], அவற்றில் 65,000 இளங்கலை பட்டதாரிகளும், 20,000 முதுகலை பட்டதாரிகளும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆவணங்கள்கல்விச்சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு தகவல்கள், தற்குறிப்பு, ஊதிய விவரங்கள்பரணிடப்பட்டது 2012-09-16 at the வந்தவழி இயந்திரம், ஐ797, டிஎசு160, உள்ளிட்டவைகளை வேலை கொடுக்கும் நிறுவனம் ஊழியருக்காக சமர்ப்பிக்க வேண்டும். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia