எடின்பரோ பல்கலைக்கழகம்
ஐக்கிய இராட்சியத்தின் நாடான ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் எடின்பரோ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதை 1583-ஆம் ஆண்டு நிறுவினர்.[4] இது ஸ்காட்லாந்தின் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. உலகளவில் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.[5] இந்த பல்கலைக்கழகத்தின் கட்டிடங்கள் எடின்பரோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓல்டு டவுனில் உள்ளன.[6] 2013-ஆம் ஆண்டில் க்யூ.எஸ் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தியது. அந்த வரிசையில் இருந்த முன்னணி பல்கலைக்கழகளில் பதினேழாவது இடத்தைப் பெற்றது.[7] கேம்பிரிட்ஜ், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகங்களுக்கு அடுத்தபடியாக அதிக நன்கொடைகளைப் பெறுகிறது. பள்ளிகளும் கல்லூரிகளும்
வளாகங்கள்![]() ![]() இங்கு அதிகளவிலான துறைகளிலும், பாடப்பிரிவுகளிலும் பாடம் கற்பிக்கப்படுவதால், வளாகத்தை விரிவுபடுத்தியுள்ளனர். தற்போது ஆறு வளாகங்களைக் கொண்டுள்ளது.[8] மாணவர்கள்நூலகம்இது 1580-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கிளெமெண்ட் லிட்டில் என்பவர் பெருந்தொகையை வழங்கினார். இன்றைய நிலவரப்படி,ஸ்காட்லாந்தின் பெரிய நூலகமாகத் திகழ்கிறது. இது 25 லட்சத்திற்கும் அதிகமான நூல்களைக் கொண்டுள்ளது.[9] குறிப்பிடத்தக்க நபர்கள்இந்த பல்கலைக்கழகத்தில் படித்த பலரும், பணியாற்றிய பலரும், பல முக்கிய நிறுவனங்களிலும், அமைப்புகளிலும் பதவியேற்றுள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கோர் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia