எட்னா எரிமலை
எட்னா எரிமலை (Mount Etna) ஐரோப்பாவின் தென் இத்தாலியில் சிசிலித் தீவில் உள்ளது. ஜூன் 2013 இல் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது[2]. 4000 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாகப் பொங்கியது. இதுவரை 90 முறை பொங்கியுள்ளது. 1669 ஆம் ஆண்டு பொங்கியதில் 20000 பேர் இறந்தனர்[3]. எட்னா எரிமலையை ஆராய்வதற்கு இங்கிலாந்திலிருந்து 16 பயணிகள் 2000 ஆம் ஆண்டில் அங்கு சென்றார்கள். 1992 ஆம் ஆண்டில் வெடித்துச் சிதறிய எட்னா எரிமலை 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் பகல் அன்று வெடித்தது. சிசிலியில் கடானியா வானூர்தி நிலையம் அருகில் இந்த எரிமலை உள்ளது. எனவே எரிமலை வெடித்தபோது வெளியேறிய புகை வானிலும் விமான நிலையத்திலும் பரவியதன் காரணமாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டது. எட்னா எரிமலையின் மண் வேளாண்மைக்கு ஏற்றதாக உள்ளது. எனவே மலையின் அடிவாரச் சரிவில் திராட்சைத் தோட்டங்களும் பிற பயிர்களும் வளர்க்கிறார்கள். எட்னா எரிமலையைப் பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் அங்கு செல்கிறார்கள். 16 மார்ச் 2017 அன்று எட்னா எரிமலை மீண்டும் வெடித்து தீக்குழம்புகளைக் கக்கியது.[4][5] இதனை படம் எடுக்கச் சென்ற பிபிசி ஊடகவியலாளர்கள் வெடித்துத்து சிறிய தீக்குழம்புகளிலிருந்து மயிரிழையில் தப்பினர்.[6] உசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia