எட்மண்ட் ஃவெல்ப்ஸ்![]() எட்மண்ட் எஸ். ஃவெல்ப்ஸ் (பி. ஜூலை 26, 1933) அவர்கள் ஒரு புகழ்பெற்ற பொருளியல் அறிஞர். இவர் 2006ஆம் ஆண்டிற்கான பொருளியல் நோபல் நினைவுப் பரிசைப் பெற்றார். இவர் அமெரிக்காவில் உள்ள இல்லினாய் மாநிலத்தில் உள்ள எவன்ஸ்ட்டன் என்னும் ஊரில் பிறந்தார். 1960களில் இவர் யேல் கவ்லெஸ் நிறுவனத்தில் இருந்தபொழுது முன்வைத்த பொருளியல் வளர்ச்சிக் கருத்துக்கள் புகழ் பெற்றவை. தனிமனிதர்களின் பொருளியல், சிறு நிறுவனங்களின் பொருளியல் போன்றவற்றை ஆராயும் சிற்பொருளியல் (microeconomics) துறையின் கருத்துக்களோடு, வேலையற்றோரின் எண்ணிக்கைநிலை, பணப்புழக்கம்-கூலி, பணவீக்கம் முதலிய பேரினப்பொருளியல் கருத்துக்களை உறவுப் படுத்தியது இவருடைய அறிவார்ந்த பொருளியல் கொள்கைகள் எனக் கருதப்படுகின்றது. ஃவெல்ப்ஸ் அவர்கள் 1955ல் ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் யேல் பல்கலைக்கழகத்தில் 1959ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியைத்தொடங்கிய பின், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும், கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார். நோபல் பரிசுக் குழு அளித்த பட்டையத்தில் இவருடைய பொருளியல் கருத்துக்கள், குறுகிய-கால, நெடுங்காலப் பொருளியல் கொள்கைகளின் விளைவுகளுக்கு இடையே உள்ள உறவை ஆழ அறிந்துகொள்ள உதவியன என்று குறிப்பிடுகின்றது. வாழ்க்கை வரலாறு
எழுத்துகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia