எட்வர்டு செயித்
எட்வர்டு வேடி செயித் (Edward Wadie Said நவம்பர் 1, 1935—செப்டம்பர் 24, 2003) என்பவர் பாலஸ்தீனியப் போராளி, பத்திரிகையாளர், சிந்தனையாளர், பேராசிரியர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். பிறப்பும் படிப்பும்1 நவம்பர் 1935 அன்று எருசலேமில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்த எட்வர்ட் செயித்தின் இளமைக் காலம் செருசலத்திலும் எகிப்திலும் கழிந்தது. இலக்கியத்தில் இளங்கலை பட்டத்தை பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்திலும் முதுகலைப் பட்டம் பின்னர் ஆய்வுப் பட்டம் ஆகியவற்றை ஆர்வர்டு பல்கலைக்கழகத்திலும் பெற்றார். இவருக்கு ஆங்கிலம், அரபி, பிரஞ்சு ஆகிய மொழிகளில் புலமை உண்டு. ஆங்கிலம் மற்றும் ஒப்பியல் இலக்கியப் பேராசிரியராக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணி செய்தார். பணிகள்ஓரியண்டலிசம் என்னும் பெயரில் ஒரு நூலை எழுதினார். அந் நூல் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. பாலஸ்தீனப் பிரச்சினை பற்றியும் காலனிய வல்லாண்மைப் பற்றியும் அதில் எழுதியிருந்தார் செயித். பாலஸ்தீனிய மக்களின் தன்னாட்சி உரிமைக்காகப் போராடி வந்த செயித் பாலஸ்தீனிய தேசியக் கவுன்சிலில் பல ஆண்டுகள் ஈடுபாட்டுடன் செயலாற்றினார். 1993இல் ஓசுலோ ஒப்பந்தத்தை எதிர்த்து யாசர் அரபாத் உடன் தாம் கொண்டிருந்த உறவை துண்டித்துக் கொண்டு பாலஸ்தீனியத் தேசியக் கவுன்சிலிருந்து விலகினார். ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெண்களின் உரிமைகள், கறுப்பின மக்களின் போராட்டங்கள் தொடர்பாகவும் கட்டுரைகள் எழுதினார். இசை ஆர்வம்இசையமைப்பாளர் தானியல் பேரன்போம் என்பவருடன் இணைந்து 1990 ஆம் ஆண்டில் " வெஸ்ட் --ஈஸ்ட் திவான் ஆர்செஸ்ட்ரா" என்னும் அமைப்பை நிறுவினார். அரபு நாடுகள் இசுரேல் போன்ற நாடுகளிலிருந்து திறமையான இளம் இசைக் கலைஞர்களை ஆண்டுதோறும் அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தச் செய்தார். இத்தகைய செயல்கள் மூலம் அந்நாடுகளின் மக்களிடையே நல்லுறவை மேம்படுத்த முயன்றார். பியானோ வாசிப்பதில் வல்லவர். இசை தொடர்பாக 4 நூல்கள் எழுதினார். பதினோரு ஆண்டுகள் குருதிப் புற்று நோயினால் தாக்கப்பட்டு நியூயார்க்கு நகரில் காலமானார். விருதுகள்இவருடைய சேவையையும் பங்களிப்பையும் பாராட்டி பல பல்கலைக் கழகங்கள் மதிப்புறு விருதுகள் இவருக்கு வழங்கின. 1999இல் 'அவுட் ஆப் பிளேஸ்' என்னும் நூலுக்காக நியூயார்க்கர் பரிசு கிடைத்தது. எழுதிய முக்கிய நூல்கள்
![]()
மேற்கோள்http://www.theguardian.com/news/2003/sep/26/guardianobituaries.highereducation http://www.thehindu.com/thehindu/2003/09/27/stories/2003092701981000.htm
|
Portal di Ensiklopedia Dunia