எதிர்காலம் (இலக்கணம்)இலக்கணத்தில், எதிர்காலம் (future tense) என்பது தற்போது வரை நடைபெறாத, ஆனால் எதிர்காலத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு வினைச்சொல் வடிவமாகும். புகழினி நாளை கடிதம் எழுதுவாள் என்பதில் எழுதுவாள் என்பது இனிமேல் நடைபெறுவதைக் குறிக்கும் வினைச்சொல் வடிவமாகும். ஆங்கிலத்தில் எதிர்காலத்தை வெளிப்படுத்துவதற்கான பல்வேறு இலக்கண மற்றும் சொற்பொருள் வழிமுறைகள் இருந்தாலும், சொல் வடிவ மாற்றத்தைக் கொண்டிருக்கவில்லை. இதில் will, shall ஆகிய துணை வினைச்சொற்களும் அடங்கும்.[1] வெளிப்பாடுகள்செயலைச் செய்பவர், தான் நடைபெறும் என எதிர்பார்க்கும் அல்லது தான் எதிர்காலத்தில் செய்ய நினைக்கும் செயல்களைக் கூறுவதற்கு இத்தகைய காலத்தினைப் பயன்படுத்துவர்.[2] எதிர்கால வெளிப்பாடு என்பது யதார்த்தமா அல்லது யதார்த்தமற்றதா என்பது ஒரு மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சிக் கருத்தைச் சார்ந்தது அல்ல, மாறாக நிகழ்வு உண்மையில் நடைபெறும் என்ற செயலைச் செய்பவரின் நம்பிக்கையின் அளவைப் பொறுத்தது.[3]:ப.20 இந்தோ-ஆரிய மொழிகள்தமிழ்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia