An Ethiopian Airlines Douglas DC-3 at Lalibela Airport in 1974.
எத்தியோபியன் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியா நாட்டு அரசாங்கத்தினால் நடத்தப்படும் விமானச் சேவையாகும். இது டிசம்பர் 21, 1945 இல் நிறுவப்பட்டது. ஏப்ரல் 8, 1946 முதல் தனது செயல்பாட்டினை துவங்கியது. ஆரம்பகாலத்தில் எதியோப்பியன் ஏர் லைன்ஸ் என்று இதன் பெயர் இருந்தது. 1965 ஆம் ஆண்டு ஒரு பங்கீட்டு நிறுவனமாக மாறியது. அப்போது இதன் பெயர் எத்தியோபியன் ஏர்லைன்ஸ் என்று மாற்றியமைக்கப்பட்டது. இந்நிறுவனம் 1959 முதல் சர்வதேச வான்வழி போக்குவரத்து அமைப்பின் உறுப்பினராகவும், 1968 [3] முதல் ஆப்பிரிக்க ஏர்லைன்ஸ் அமைப்புகளின் (AFRAA) உறுப்பினராகவும், டிசம்பர் 2011 முதல் ஸ்டார் அலையன்ஸின் உறுப்பினராகவும் உள்ளது.
இதன் தலைமை[4] மையமாக அட்டிஸ் அடாபாவில் உள்ள ‘போல் சர்வதேச விமான நிலையம்’ உள்ளது. இங்கிருந்து தான் 82 பயணிகள் இலக்குகளுக்கு தனது விமானச் சேவையினை செயல்படுத்துகிறது. அதில் 19 உள்நாட்டு சேவைகளும், 23 சரக்கு சம்பந்தப்பட்ட சேவைகளும் அடங்கும். ஆப்பிரிக்காவில் செயல்படுத்தப்படும் விமானச் சேவைகளில் அதிக இடங்களை இலக்குகளாக கொண்டுள்ள விமான நிறுவனம் இதுவாகும். வளர்ந்துவரும் விமானச்சேவை[5][6] நிறுவனங்களில் இதுவும் ஒன்று, அத்துடன் ஆப்பிரிக்க கண்டத்தில் [7] விமானச்சேவையினை செயல்படுத்தும் நிறுவனங்களில் இந்நிறுவனம் மிகவும் பெரியது. துணை-சஹாரன் [8] பகுதிகளில் சிறிய அளவில் இலாபம் ஈட்டக்கூடிய விமான நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இதன் கார்கோ பிரிவு “ஆப்பிரிக்கன் கார்கோ ஏர்லைன் ஆஃப் த இயர்” விருதினை 2011 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெற்றுள்ளது.[9]
கோட்ஷேர் ஒப்பந்தங்கள்
An Ethiopian Airlines Boeing 720B on short final to London Heathrow Airport in 1982.An Ethiopian Airlines Boeing 787 Dreamliner at Frankfurt AirportAn Ethiopian Airlines Fokker 50 at Bole International Airport in 2010.
ஜூன் 2014 ன் படி எதியோபியன் ஏர்லைன் பின்வரும் விமான நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
நவம்பர் 2014 ன் படி, எதியோபியன் ஏர்லைன்ஸின் விமானக் குழுக்கள் பின்வரும் விமானங்களைக் கொண்டுள்ளன.
An Ethiopian Airlines Boeing 767-200ER on short final to Dubai International Airport in 2006.
ஏர்பஸ் A350-900
போயிங் 737-400
போயிங் 737–700
போயிங் 737–800
போயிங் 737 MAX 8
போயிங் 757–200
போயிங் 767-300ER
போயிங் 777-200LR
போயிங் 777-300ER
போயிங் 787–8
பாம்பார்டியர் டேஷ் 8 Q400
கார்கோ விமான குழு
போயிங் 757-200PCF
போயிங் 777F
மெக்டொனல் டக்ளஸ் MD-11F
முந்தைய விமான குழுவில் இருந்த விமான ரகங்கள்
பெல் 47
ஏர்பஸ் A330-200
ஏர்பஸ் A340-300
ATR-42-300
ஆன்டனோவ் An-12BP
பீச் 18
போயிங் 707-320C
போயிங் 720B
போயிங் 727-200
போயிங் 737-200
போயிங் 747-200F
போயிங் 747-300
போயிங் 767-200ER
செஸ்னா 180
கான்வாயர் CV-240
டௌக்ளஸ் DC-6A
டௌக்ளஸ் DC-6B
டௌக்ளஸ் C-47
டௌக்ளஸ் C-47A
டௌக்ளஸ் C-47B
டௌக்ளஸ் DC-3D
டௌக்ளஸ் C-53
லாக்ஹீட் L-749 கான்ஸ்டெல்லேஷன்
DHC-5A பஃபெல்லோ
DHC-7-100
ஃபோக்கர் 50
லாக்ஹீட் L-100-30
மெக்டொனல் டௌக்ளஸ் MD-11P
பைபர் PA-18 சூப்பர் கப்
டுவின் ஓட்டர்
சேவைகள்
க்ளவுட் நைன் மற்றும் பொருளாதார வகுப்புகள் ஆகிய இரு பிரிவுகளும் பெரும்பாலான எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் இருக்கும் சேவைப்பிரிவுகள் ஆகும். அந்தந்த பிரிவுகளுக்குத் தகுந்தாற்போல் பொழுதுபோக்கு அம்சங்களும் உணவுப் பொருட்களும் பயணிகளுக்கு வழங்கப்படும்.
விருதுகள்
எத்தியோபியன் ஏர்லைன்ஸ் பல விருதுகளைப் பெற்றுள்ளது.
அவற்றில் குறிப்பிடத்தக்க சில விருதுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டொரொன்டோவின் பிளானெட் ஆப்பிரிக்க நெட்வொர்க் வழங்கிய “டிரான்ஸ்ஃபார்மேஷன் விருது - 2012” – ஜூலை 17, 2012.
பாம்பார்டியர் ஏரோஸ்பேஸ் வழங்கிய “ஏர்லைன் ரிலையபிலிட்டி பெர்ஃபார்மன்ஸ் விருது” - ஏப்ரல் 30, 2012
கென்யாவில் உள்ள நாயரோபியில் நடைபெற்ற மாநாட்டில் “ஆப்பிரிக்கன் கார்கோ ஏர்லைன் ஆஃப் த இயர் விருது – 2011” வழங்கப்பட்டது – பிப்ரவரி 24, 2011
சம்பவங்களும் விபத்துகளும்
வான்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பு அமைப்பின் அறிக்கையின்படி 1965 முதல் எதியோபியன் ஏர்லைன்ஸ் சுமார் 60 விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது, அத்துடன் இந்நிறுவனத்தின் பழைய பெயரில் ஆறு விபத்துக்களும் பதிவாகியுள்ளன. ஜனவரி 2013 ன் படி, சுமார் 337 பயணிகள் இந்நிறுவனத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவன விமானங்களை பயணிகளுடன் கடத்தியுள்ளதாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. இதில் ஒரு விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்தானது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து 1996 ஆம் ஆண்டு எரிபொருள் அனைத்தும் தீர்ந்துவிட்டதால் ஏற்பட்டது.
இந்நிறுவனத்தின் இரண்டாம் பெரிய விபத்து 2010 ஆம் ஆண்டு ஏற்பட்டது. இதில் விமானம் பியுரெட்-ராஃபிக் ஹரிரி என்ற சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் மெடிட்டெரனியன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 90 மக்கள் இறந்தனர். 1988 ஆம் ஆண்டில் போயிங்க் 737-200 ரக விமானம் விபத்துக்குள்ளானது இந்நிறுவனத்தின் மூன்றாவது பெரிய விபத்தாகும், இதில் 35 மக்கள் இறந்தனர். மற்றபடி ஆப்பிரிக்காவில் செயல்படுத்தப்படும் விமானச் சேவைகளில் எதியோபியன் ஏர்லைன்ஸ் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அமைப்பினைக் கொண்டுள்ளது.
↑"Profile on Ethiopian Airlines". Centre for Aviation. Archived from the original on 8 October 2012. Archived from the original on 12 டிசம்பர் 2014. Retrieved 29 December 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); no-break space character in |publisher= at position 35 (help)
↑Clark, Oliver (4 June 2014). "Ethiopian and Austrian sign codeshare". Flightglobal (London). Archived from the original on 28 ஜூலை 2014. Retrieved 28 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); no-break space character in |publisher= at position 13 (help)CS1 maint: numeric names: authors list (link)