எத்திலீன் கார்பனேட்டு
எத்திலீன் கார்பனேட்டு (Ethylene carbonate) (CH2O)2CO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மம் ஆகும். எத்திலீன் கிளைக்கால் மற்றும் கார்பானிக் அமிலத்தின் கார்பனேட்டு எசுத்தர் என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. அறை வெப்பநிலையில் (25°செ) எத்திலீன் கார்பனேட்டு ஒரு ஒளிபுகும் படிகத் திண்மமாக நிறமற்றும் நெடியற்றும் காணப்படுகிறது. சிறிதளவு நீரில் கரைகிறது. எத்திலீன் கார்பனேட்டு திரவ நிலையில் இருக்கும் போது (உ.நி: 34-37 °செல்சியசு|செ]]) நிறமற்ற மணமற்ற திரவமாக உள்ளது [2]. தயாரிப்பும் வினைகளும்எத்திலீன் ஆக்சைடும் கார்பனீராக்சைடும் வினைபுரிவதால் எத்திலீன் கார்பனேடு உருவாகிறது. இவ்வினையில் பல்வேறு வகையான நேர்மின் அயனிகளும் அணைவுச் சேர்மங்களும் வினையூக்கியாகச் செயல்படுகின்றன :[3]
எத்திலீன் கார்பனேட்டு (மற்றும் புரோப்பைலீன் கார்பனேட்டு) மெத்தனால் பதிலீட்டு எசுத்தராக்கல் வினையின் பயனாக டைமெத்தில் கார்பனேட்டைத் தருகிறது. டைமெத்தில் கார்பனேட்டு ஒரு பயனுள்ள கரைப்பானாகவும் மெத்திலேற்றும் ,முகவராகவும் பயன்படக்கூடிய சேர்மம் ஆகும்.
டைமெத்தில் கார்பனேட்டும் இதேபோல பதிலீட்டு எசுத்தராக்கல் வினையின் பயனாக ஒரு பாசுகீன் பதிளிட்டு சேர்மமான டைபீனைல் கார்பனேட்டாக மாறுகிறது :[3]
பயன்கள்மூலக்கூற்று மின்னிருமுனைவுத் திருப்புத்திறன் மதிப்பு 4.9 டி உள்ள ஒரு முனைவுக் கரைப்பானாகப் பயன்படுகிறது. புரோப்பைலீன் கார்பனேட்டை விட மின்னிருமுனைவுத் திருப்புத்திறன் டி மட்டுமே எத்திலீன் கார்பனேட்டு கொண்டுள்ளது. இலித்தியம் மின்கலங்களில் உள்ள மின்பகுளிகளில் மின் தடையை பகுதிப் பொருளாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். பலபடிகளிலும் கரிமத் தொகுப்பு வினைகளிலும் பயனாகும் வினைலீன் கார்பனேடு தயாரிப்பில் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும் நெகிழ்வியாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia