என்சலடசு (Enceladus) என்பது சனிக் கோளின் ஆறாவது பெரிய துணைக்கோள் (நிலா) ஆகும்[11]. இது 1789 ஆம் ஆண்டில் வில்லியம் ஹேர்ச்செல் என்ற பிரித்தானிய வானியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது[12]. வொயேஜர் விண்கலங்கள் இரண்டு 1980களின் ஆரம்பத்தில் இதற்கு அருகாமையில் செல்லும் மட்டும் இத்துணைக்கோள் பற்றிய அறிவு மிகவும் குறைவானதாகவே இருந்தது. ஆனாலும், இதன் மேற்பரப்பில் பனிக்கட்டி நீர் இருப்பது அறியப்பட்டிருந்தது. வொயேஜர் விண்கலங்கள் அனுப்பிய தகவல்களின்படி, இத்துணைக்கோளின் விட்டம் 500 கி.மீ. ஆகும். இது டைட்டான் என்ற சனியின் மிகப்பெரிய துணைக்கோளை விட 10 மடங்கு குறைவானதாகும். இதன் மேற்பரப்பில் விழும் சூரிய வெளிச்சம் அனைத்தையும் இது மீளத் தெறிக்கிறது.
2005 ஆம் ஆண்டில், நாசாவின்கசினி விண்கலம் என்சலடசுவை பல தடவைகள் அணுகி, அதன் மேற்பரப்பை விபரமாக ஆராய்ந்தது. குறிப்பாக, இத்துணைக்கோளின் முனைவுப் பகுதியில் நீர் செறிந்த புகை வெளியேறுவதைக் கண்டுபிடித்தது.
நிலவின் பனிக்கட்டி அடர்ந்த மேற்பரப்பிற்குக் கீழே பெருமளவு உப்புநீர் அடங்கிய தேக்கம் ஒன்று இருக்கக்கூடிய சான்றுகளை கசினி விண்ணுளவி கண்டுபிடித்துள்ளதாக 2011 சூன் மாதத்தில் நாசா அறிவியலாளர்கள் அறிவித்தனர்.[13]
↑Spencer, J. R.; Pearl, JC; Segura, M; Flasar, FM; Mamoutkine, A; Romani, P; Buratti, BJ; Hendrix, AR et al. (2006). "Cassini Encounters Enceladus: Background and the Discovery of a South Polar Hot Spot". Science311 (5766): 1401–5. doi:10.1126/science.1121661. பப்மெட்:16527965. Bibcode: 2006Sci...311.1401S.
↑Dougherty, M. K.; Khurana, KK; Neubauer, FM; Russell, CT; Saur, J; Leisner, JS; Burton, ME (2006). "Identification of a Dynamic Atmosphere at Enceladus with the Cassini Magnetometer". Science311 (5766): 1406–9. doi:10.1126/science.1120985. பப்மெட்:16527966. Bibcode: 2006Sci...311.1406D.
↑Herschel, W.; Account of the Discovery of a Sixth and Seventh Satellite of the Planet Saturn; With Remarks on the Construction of Its Ring, Its Atmosphere, Its Rotation on an Axis, and Its Spheroidical Figure, Philosophical Transactions of the Royal Society of London, Vol. 80 (1790), pp. 1–20