என்ரான்
என்ரான் கார்ப்பரேசன் (Enron Corporation) என்பது டெக்சாசின் ஹியூஸ்டனில் அமைந்திருந்த ஒரு அமெரிக்க எரிசக்தி, விளைபொருட்கள், சேவை நிறுவனமாகும். இது கென்னத் லே என்பவரால் வழிநடத்தப்பட்டு 1985 ஆம் ஆண்டில் ஹியூஸ்டன் நேச்சுரல் கேஸ் மற்றும் இன்டர்நார்த் ஆகிய நிறுவனங்களின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இணைப்பின் போது இவை இரண்டும் ஒப்பீட்டளவில் சிறிய பிராந்திய நிறுவனங்களாக இருந்தன. 2, திசம்பர், 2001 அன்று திவால்நிலைக்கு வருவதற்கு முன்னர், என்ரான் தோராயமாக 20,600 ஊழியர்களைப் பணியமர்த்தி, ஒரு பெரிய மின்சாரம், இயற்கை எரிவளி, தகவல் தொடர்பு, காகிதக் கூழ் மற்றும் காகித நிறுவனமாக இருந்தது. 2000 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட $101 பில்லியன் வருவாய் ஈட்டியதாகக் கூறப்படுகிறது. [1] ஃபார்ச்சூன் இதழ் என்ரானை "அமெரிக்காவின் மிகவும் புதுமையான நிறுவனம்" என்று தொடர்ந்து ஆறு ஆண்டுகள் அறிவித்தது. 2001 ஆம் ஆண்டின் இறுதியில், என்ரானின் நிதி நிலையானது, என்ரான் ஊழல் என்று அழைக்கப்படும் திட்டமிடப்படு செய்யப்பட்ட கணக்கியல் மோசடியால் நீடித்துவந்தது என்பது தெரியவந்தது. என்ரான் செய்த நிறுவன மோசடியானது ஊழலுக்கு ஒத்ததாக கருதப்பட்டது. இந்த ஊழல் அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்களின் கணக்கியல் நடைமுறைகளையும், செயல்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்கியது. இதுவே 2002 ஆம் ஆண்டின் சர்பேன்ஸ்-ஆக்ஸ்லி சட்டத்தை இயற்றுவதற்கு ஒரு காரணியாக ஆனது. இது பெரிய அளவில் வணிக உலகத்தை பாதித்தது, வேர்ல்ட்காமின் இன்னும் பெரிய மோசடி திவால்நிலையும் உருவானது. இதனையடுத்து என்ரான், வேர்ல்ட்கோமின் ஆகிய நிறுவனங்களின் முக்கிய தணிக்கையாளராக இருந்து பால ஆண்டுகளாக மோசடியில் சதிகாரராக இருந்த ஆர்தர் ஆண்டர்சன் கணக்கியல் நிறுவனம் கலைக்கப்பட்டது.[2] 2001 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் என்ரான் திவால்நிலைக்கு மனு தாக்கல் செய்தது மேலும் அதன் திவால்நிலை ஆலோசகராக வெயில், கோட்ஷால் & மாங்கேஸ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தது. நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், 2004 நவம்பரில் என்ரான் திவால்நிலையிலிருந்து வெளியேற்றப்பட்டது. ஒரு புதிய இயக்குநர்கள் குழு அதன் பெயரை என்ரான் கிரெடிட்டர்ஸ் ரிகவரி கார்ப் என்று மாற்றியது. மேலும் திவால்நிலைக்கு முந்தைய காலத்திய என்ரானின் சில செயல்பாடுகள் மற்றும் சொத்துக்களை மறுசீரமைத்தல் மற்றும் கலைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வலியுறுத்தியது. [3] 7, செப்டம்பர், 2006 அன்று, என்ரான் கடைசியில் அதன் எஞ்சிய துணை நிறுவனமான பிரிஸ்மா எனர்ஜி இன்டர்நேஷனலை ஆஷ்மோர் எனர்ஜி இன்டர்நேஷனல் லிமிடெட்க்கு (இப்போது AEI) விற்றது. இது அமெரிக்க வரலாற்றில் மோசடி காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய திவால்நிலையாகும். [4] 2, திசம்பர், 2024 அன்று, என்ரான் வலைத்தளம் நையாண்டியாக மீண்டும் தொடங்கப்பட்டது, [5] [6] பேர்ட்ஸ் ஆர்ன்ட் ரியல் நிறுவனத்தின் இணை நிறுவனர் கானர் கெய்டோஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். [7] வரலாறுஇணைப்புக்கு முந்தைய காலம் (1925–1985)என்ரானின் முதன்மை முன்னோடி நிறுவனங்களில் ஒன்று இன்டர்நார்த் ஆகும். இது 1930 ஆம் ஆண்டு நெப்ராசுகாவின் ஒமாகாவில், கருப்பு செவ்வாய்க்கு சில மாதங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. பெரும் பொருளியல் வீழ்ச்சியின் போது குறைந்த விளையில் கிடைத்த இயற்கை எரிவளி, குறைந்த சம்பளத்தில் கிடைத்த தொழிலாளர்கள் போன்றவை நிறுவனத்தின் துவக்க கால வளர்ச்சிக்கு உதவின. 1932 வாக்கில் நிறுவனத்தின் வளர்ச்சி இரட்டிப்பானது. அடுத்த 50 ஆண்டுகளில், பல எரிசக்தி நிறுவனங்களை கையகப்படுத்தியதால், நார்தர்ன் மேலும் விரிவடைந்தது. பெரும்பாலான கையகப்படுத்துதல்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டபோதிலும், சில மோசமாக முடிவடைந்தன. மின் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான குரூஸ்-ஹிண்ட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதில் இன்டர்நார்த் கூப்பர் இண்டஸ்ட்ரீசுடன் போட்டியிட்டு அதில் தோல்வியடைந்தது. கையகப்படுத்தலின் போது கூப்பரும் இன்டர்நார்த்தும் வழக்குகளின் வழியாக சண்டையிட்டன. அவை பரிவர்த்தனை முடிந்த பிறகு இறுதியில் தீர்வுகாணப்பட்டன. இதன் துணை நிறுவனமான நார்தர்ன் நேச்சுரல் கேஸ், வட அமெரிக்காவின் மிகப்பெரிய எரிவளி குழாய் நிறுவனத்தை நடத்தியது. 1980களில், இன்டர்நார்த் இயற்கை எரிவாயு உற்பத்தி, பரிமாற்றம், சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஒரு முக்கிய சக்தியாக மாறியது. மேலும் நெகிழித் துறையில் ஒரு கண்டுபிடிப்பாளராகவும் இருந்தது. [8] 1983 ஆம் ஆண்டில், இன்டர்நார்த், பார்ச்சூன் 500 எண்ணெய் ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான பெல்கோ பெட்ரோலியம் நிறுவனத்துடன் பட்டியலில் இடம்பெற்றது. [9] இணைப்புஇன்டர்நார்த்தின் முந்தைய தொழில் வெற்றிகளால் அது பெருநிறுவனங்களின் கையகப்படுத்தல்களின் இலக்காக மாறியது. [10] இன்டர்நார்த் தலைமை நிர்வாக அதிகாரி சாம் செக்னர் ஹியூஸ்டன் நேச்சுரல் கேஸ் (எச்.என்.ஜி.) நிறுவனத்துடன் நட்புரீதியான இணைப்பை விரும்பினார். மே 1985 இல், இன்டர்நார்த் எச்.என்.ஜி. ஐ $2.3 பில்லியனுக்கு கையகப்படுத்தியது, அது அப்போதைய சந்தை விலையை விட 40% அதிகமாகும், மேலும் 16, யூலை, 1985 அன்று, இரண்டு நிறுவனங்களும் ஒன்றிணைவதற்கு இசைவளித்தன. [11] இரண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சொத்துக்கள் அந்த நேரத்தில் அமெரிக்காவில் இரண்டாவது பெரிய எரிவாயு குழாய் அமைப்பாக உருவானது. [12] அயோவாவுக்கும், மினசோட்டாவிற்கும் சேவை செய்த இன்டர்நார்த்தின் வடக்கு-தெற்கு எரிவளி குழாய்வழிகள், எச்.என்.ஜி. இன் புளோரிடா மற்றும் கலிபோர்னியாவின் கிழக்கு-மேற்கு எரிவளி குழாய்வழிகளை நன்கு முழுமைப் படுத்தின. [11] இணைப்புக்குப் பிந்தைய உயர்வு (1985–1991)![]() இன்டர்நார்த் தொழில்நுட்ப ரீதியாக தாய் நிறுவனமாக இருந்தபோதிலும், துவக்கத்தில் இந்த நிறுவனம் எச்.என்.ஜி/இன்டர்நார்த் இன்க். என்ற பெயரால் அழைக்கப்பட்டது. [12] Retrieved July 13, 2016.</ref> முதலில் இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக செக்னர் இருந்தார். ஆனால் அவர் விரைவில் இயக்குநர்கள் குழுவால் நீக்கப்பட்டு லே அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். லே தனது தலைமையகத்தை ஊஸ்டனுக்கு மீண்டும் மாற்றி, ஒரு புதிய பெயரைத் தேடத் தொடங்கினார். இந்த செயல்பாட்டில் கவனம் செலுத்திய குழுக்கள், ஆலோசகர்களுக்காக $100,000 இக்கும் அதிகமாக செலவிட்டார். 14, பிப்ரவரி, 1986 அன்று ஊழியர்களுடனான ஒரு சந்திப்பின் போது, இந்தப் பெயர் மாற்றத்தில் தனக்கு உள்ள ஆர்வத்தை லே அறிவித்தார். மேலும் 10, ஏப்ரல் அன்று பங்குதாரர்களிடம் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia