என் மகன் மகிழ்வன்
என் மகன் மகிழ்வன் (My Son Is Gay) 2018-ம் ஆண்டின் இந்தியத் தமிழ்த் திரைப்படம். ஆண் ஓரின ஈர்ப்பு பற்றித் தமிழில் எடுக்கப்பட்டுள்ள முதல் படமாகும்.[1] மகிழ்வனான ஒருவன் தன்னிலையை வெளிப்படுத்தியபோது சந்திக்கும் போரட்டங்களைப் பற்றிய கதைக்களத்தைக் கொண்டது. தன்னை அவன் வெளிப்படுத்திய பின்னர் அவனது தாய் மற்றும் அவனைச் சுற்றி வாழும் மற்றவர்களுடான உறவு எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை இத் திரைப்படக் கதை விளக்குகிறது. சென்னையைச் சேர்ந்த லோகேஷ் குமார் என்பவர் இத்திரைப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். சமுதாயத்தால் ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மையினரும், பெரும்பான்மை சமுதாயத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மரியாதையுடன் வாழ்வதற்கு உரிமையுள்ளவர்கள் என்பதை வலியுறுத்தும்வகையில் இத்திரைப்படம் அமைந்துள்ளது.[2][3][4] 2018 இல் வெளிவரவுள்ளது. கதைலட்சுமி ஒரு பள்ளி முதல்வர். அவரது வாழ்க்கை எந்தவித சிக்கலுமின்றி சீராகப் போய்க்கொண்டிருக்கிறது. அவரது மகன் வருண். அவன் தாயிடம் மிகுந்த பாசங்கொண்ட, மகிழ்ச்சியான இளைஞன். வருணுக்குத் தான் மற்ற பையன்களைப் போலில்லை என்பது தெரிந்தாலும் தன் தாயின் பாசத்தில் பாதுகாப்பினை உணர்கிறான். ஆனால் வருண் மகிழ்வன் என்று தெரிந்தபின்னர், அவனை லட்சுமி நிராகரிக்கிறாள். கார்த்திக் என்பவரோடு காதல் வயப்பட்டாலும், தனது தாயின் தள்ளிவைப்பால் வருணால் முன்போல மகிழ்ச்சியாக இருக்கமுடியவில்லை. அதே சமயம் தனது மகனின் பிரிவைத் தாங்க முடியாத லட்சுமி அவனைத் தேடிக் கண்டுபிடிக்க முனைகிறாள். தயாரிப்பு2013 இல் இந்தியில் தயாரிப்பதற்காகத் திட்டமிடப்பட்ட இத்திரைப்படம் நிதிப் பற்றாக்குறையினால் கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்கு முடங்கிக் கிடந்தது[5] 2016 இன் துவக்கத்தில், தயாரிப்பாளர் அனில் சக்சேனா புது நடிகர்கள் மற்றும் புது படக்குழுவினரைக் கொண்டு திரைப்படத்தைத் தமிழில் தயாரிக்க முடிவு செய்தார். 2017 இல் முடிவடைந்தது. இந்தப் திரைப்படத்திற்கு, தமிழ்த் திரைப்பட தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் நடுவில் வெளியிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திரையிடல்இத்திரைப்படத்தின் முதற்திரையிடல் மெல்பேர்ன் நகரத்தில் நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் நடைபெற்றது. 2017 அக்டோபரில் நியூயார்க் நகரில் நடைபெற்ற நியூபெஸ்ட் எல்.ஜி.பி.டி. திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. கொல்கத்தாவில் பன்னாட்டு எல்.ஜி.பி.டி. திரைப்படம் மற்றும் காணொளித் திருவிழாவில் திரையிடப்பட்டது. இதுவே இந்தியாவில் இத்திரைப்படத்தின் முதல் திரையிடல் ஆகும். பின்னர் 2017 திசம்பரில் சென்னையில் நடைபெற்ற 15 ஆவது பன்னாட்டுத் திரைப்படத் திருவிழாவில் திரையிடப்பட்டது. கொல்கத்தாவிலும் சென்னையிலும் இத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.[6][7][8] ஐதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது இந்திய உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. உலகின் பல்வேறு திரைப்படங்கள் போட்டியிட்ட நிலையில், நடுவர் குழுவால் இப்படம் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளது[1][9] நடிப்பு
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia