என் மகன் (1945 திரைப்படம்)

1974 இல் இதே பெயரில் வெளிவந்த திரைப்படத்தைப் பற்றிய கட்டுரைக்கு என் மகன் (1974 திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.

என் மகன்
1945 என் மகன் திரைப்படத்தின் விளம்பரம்
இயக்கம்ஆர். எஸ். மணி
தயாரிப்புகோவை சென்ட்ரல் ஸ்டூடியோஸ்
நடிப்புஎன். கிருஷ்ணமூர்த்தி
டி. பாலசுப்பிரமணியம்
டி. வி. நாராயண சாமி
என். எஸ். நாராயணபிள்ளை
யு. ஆர். ஜீவரத்தினம்
எம். எம். ராதாபாய்
சி. கே. சரஸ்வதி
வெளியீடுநவம்பர் 3, 1945
நீளம்10,969 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் மகன் 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். கிருஷ்ணமூர்த்தி, டி. பாலசுப்பிரமணியம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். அன்றைய ஆங்கில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கோவை சென்ட்ரல் ஸ்டூடியோஸ் தயாரித்து வெளியிட்டத் திரைப்படம்.[1][2]

கதைச் சுருக்கம்

என் மகன் திரைப்படத்தில் என். கிருஷ்ணமூர்த்தி

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சென்னைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி முதலியாரின் மகன் செல்வம் கல்லூரியில் படிக்கிறான். அப்பா மூர்த்தி செல்வத்தின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். அப்பா ஏற்பாடு செய்துள்ள பெண் தனது காதலி விமலா தான் என்பது செல்வத்துக்குத் தெரியாது. விமலாவுக்கும் அப்படியே தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை செல்வம்தான் என்று இருவரும் வழ்கையில் வெறுப்படைந்து விமலா "ஆல் இந்தியா நர்ஸிங் சர்வீஸ்" பயிற்சிக்கு போகிறாள், "இந்தியன் ஏர்போர்ஸில்" சேருகிறான். சப்பானியர் ஆக்கிரமிப்பிலிருந்து பர்மாவை விடுவிக்க இந்திய விமானப்படை போகிறது. போரில் செல்வம் படுகாயமடைகிறான். போர்முனையில் மருத்துவச் சிகிச்சை முகாமில் விமலாவை சந்திக்கிறான். அவர்கள் காதல் நிறைவேறுகிறது.

மேற்கோள்கள்

  1. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா-ஆசிரியர்-அறந்தை நாராயணன்-NCBH-வெளியீடு-1988
  2. ராண்டார் கை (10 சூன் 2010). "En Magan (1945)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2017-12-08 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171208013207/http://www.thehindu.com/features/cinema/En-Magan-1945/article16242398.ece. பார்த்த நாள்: 23 செப்டம்பர் 2016. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya