எம்விசிமா


எம்விசிமா
A lateral chest x-ray of a person with emphysema. Note the barrel chest and flat diaphragm.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புpulmonology
ஐ.சி.டி.-10J43.
ஐ.சி.டி.-9492
நோய்களின் தரவுத்தளம்4190
மெரிசின்பிளசு000136
ஈமெடிசின்med/654
ம.பா.தD011656
நுரையீரல் அமைப்பும் அதன் பகுதிகளும். 1:மூச்சுக்குழாய் (Trachea) 2:நுரையீரல் சிரை (Pulmonary vein) 3: நுரையீரல் நற்குருதிக்குழாய் (Pulmonary artery) 4: நுண்காற்றறைக் குழாய் (Alveolar duct) 5: நுண் காற்ற்றரைகள் (Alveoli) 6: இதயக் கிளை (Cardiac notch) 7: நுரையீரல் நுண்கீளைகள் (Bronchioles) 8: நுரையீரல் மூன்றாம்நிலை உட்கிளை (Tertiary bronchi) 9: நுரையீரல் இரண்டாம்நிலை உட்கிளை (Secondary bronchi) 10: நுரையீரல் முதற்கிளை (Primary bronchi) 11: குரல்வளை (Larynx)

எம்பிசிமா அல்லது எம்பைசிமா (Emphysema) என்பது ஒரு நீண்ட கால, நுரையீரலின் வளர்ச்சியடைந்த நோய், இது மூச்சுக் காற்று பற்றாக்குறையை ஏற்படுத்துவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. எம்பிசிமா இருக்கும் நபர்களிடத்தில் நுரையீரலின் உடலியல் வடிவம் மற்றும் செயல்பாட்டை ஆதரிப்பதற்குத் தேவையான நுரையீரல் திசுக்கள் அழிக்கப்பட்டிருக்கும். இது நீடித்த நுரையீரல் வளர்ச்சித் தடுப்பு நோய் எனப்பொருள் படும் குரோனிக் அப்சுட்ரக்டிவ் பல்மொனரி டிசீசு அல்லது COPD (பல்மொனரி என்பது நுரையீரலைக் குறிக்கிறது) என்றழைக்கப்படும் நோய்க் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது. எம்பிசிமா, இடையூறு செய்கிற நுரையீரல் நோய் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம், நுண்ணிய காற்றறைகளாகிய ஆல்வியோலிகளைச் சுற்றியுள்ள நுரையீரல் திசுக்களை அழித்து, மூச்சுக் காற்று வெளியே விடப்பட்ட பின்னர் இந்தக் காற்று அறைகளைத் தங்கள் செயல்பாட்டு வடிவத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் செய்கிறது.

எம்பிசிமா என்ற இந்தச் சொல்லுக்கான பொருள் வீக்கமடைதல் என்று பொருள், இது கிரேக்க எம்கைசான் என்னும் சொல்லிலிருந்து வருகிறது, அதற்கு உப்பச் செய்தல் என்று பொருள், அந்தச் சொல் உருவாக்கமே இவ்வாறு இருக்கிறது en என்றால் உள்ளே மற்றும் physa என்றால் மூச்சு, வன்காற்று .[1]

வகைப்பாடு

எம்பிசிமா பொதுவாக கடுமையான மார்புச் சளி நோயுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. எம்பிசிமா அல்லது கடுமையான மார்புச் சளி நோய்களின் "கலப்படமற்ற" நிலைமைகளை விரித்துரைப்பது கடினமாக இருப்பதால் அவை பொதுவாக கடுமையான இடையூறுபடுத்தும் நுரையீரல் நோய் (COPD) என்று ஒன்றாய்த் தொகுக்கப்பட்டுள்ளது.

எம்பிசிமா முதன்மை மற்றும் இணைவான வண்ணமாக வகைப்படுத்தப்படலாம். எனினும் அது பொதுவாக இடத்தைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது.

எம்பிசிமா மேலும் பானாசினெரி மற்றும் சென்ட்ரோசினெரி (அல்லது பானாசினார் மற்றும் சென்ட்ரியாசினார்,[2] அல்லது சென்ட்ரிலோபுலார் மற்றும் பான்லோபுலார்) என்று மேலும் சிறுபிரிவுகளாகப் பிரிக்கப்படலாம்.[3]

  • பானாசினார் (அல்லது பான்லோபுலார் ) எம்பிசிமா: ஒட்டுமொத்த மூச்சுப் பை, மூச்சு நுண்குழாய் முதல் மூச்சுச்சிற்றறைகள் வரையில் விரிவடைந்திருக்கும். இது மிகப் பொதுவாக கீழ்ப்புற நுரையீரலில் ஏற்படுகிறது, குறிப்பாக அடித்தளப் பகுதிகளில் மற்றும் நுரையீரலின் மேல் விளிம்புகளில் ஏற்படுவது.[2]
  • சென்ட்ரோசினெர் (அல்லது சென்ட்ரிலோபுலார் ) எம்பிசிமா: மூச்சு நுண்குழாய் (மூச்சுப் பையின் அருகிலும் நடுப் பாகத்திலும்) விரிவடைகிறது. புறக்கோடிய (உடலின் உட்புறத்தை விட்டு விலகிய) அசுனசு (acinus) அல்லது மூச்சுச்சிற்றறைகளில் மாற்றமிருப்பதில்லை. இது மிகப் பொதுவாக மேல்புற நுரையீரலில் ஏற்படுகிறது.[2]

இதர வகைகளில் அடங்குபவை புறக்கோடிய அசினார் மற்றும் ஒழுங்கற்றவை.[2]

ஒரு சிறப்பு வகையாக இருப்பது பிறக்கும்போதிருந்தே தோன்றும் காஞ்செனிட்டல் லோபர் எம்பிசிமா (CLE) .

பிறவியிலேயே உள்ள நுரையீரலுக்குரிய எம்பிசிமா

காஞ்செனிட்டல் லோபர் எம்பிசிமா நுரையீரல் சார்ந்த பாகம் மிக அதிகமாக விரிவடையும் விளைவினை ஏற்படுத்தும் மற்றும் உடல் பாகத்தின் அதே பக்கத்தின் நுரையீரலின் இதர பாகங்களைச் சுருக்கிவிடும், மேலும் நுரையீரலின் எதிர்ப்புறத்தையும் கூட சுருக்கிவிடும் வாய்ப்பிருக்கிறது. மூச்சுக்குழாய் ஒடுங்கி விடுவதற்குக் காரணம், மூச்சுக்குழாய் குறுத்தெலும்பு வலுகுன்றியிருத்தல் அல்லது இல்லாதிருத்தல்.[4]

பொதுவாக ஒரு வழக்கத்துக்குமாறான பெரிய இரத்தக்குழாய் காரணமாக பிறவியிலேயே வெளிப்புற சுருங்குதல் இருக்கலாம். இது மூச்சுக்குழாய் குருத்தெலும்பு குறைபாட்டினை ஏற்படுத்தி அவற்றை மெதுமையானதாகவும் முறியக்கூடியதாகவும் ஆக்குகிறது.[4]

காஞ்செனிட்டல் லோபர் எம்பிசிமா மாற்றக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கிறது, இருந்தாலும் இது உயிருக்குத் தீவிளைவு தரக்கூடியதாக இருந்து, பிறந்து நான்கே வாரமான குழந்தைகளிடத்தில் மூச்சு விடுவது தொடர்பாகக் கடுந்துன்பங்களை ஏற்படுத்தும்.[4]

குறிகள் மற்றும் நோய்அறிகுறிகள்

எம்பிசிமா நுரையீரல் திசுவின் ஒரு நோய், இது மூச்சுச்சிற்றறைகளுக்குத் துணைபுரியும் கட்டமைப்புகளின் அழிவினால் ஏற்படுகிறது, சில நிலைமைகளில் ஆல்பான 1-ஆன்டிட்ரைப்சின் பற்றாக்குறை செயல்பாட்டின் காரணமாகவும் அவ்வாறு ஏற்படுகிறது. மூச்சுச்சிற்றறைகளின் முரிந்துவிடும் திறன் குறைந்துவிடுவதால், கடுமுயற்சியால் மூச்சு வெளியிடுதல்களின் போது இது அந்தச் சிறு காற்றுவழிகளை பலவீனமடையச் செய்கிறது. இதன் விளைவாக காற்றோட்டம் தடுக்கப்பட்டு காற்று நுரையீரல்களில் சிக்கிக்கொள்கிறது, இது இதர தடையேற்படுத்தும் நுரையீரல் நோய்களின் அதே வழிமுறையில் செயல்படுகிறது. நோய் அறிகுறிகளில் உள்ளடங்குபவை, செயல்பாடுகளின்போது மூச்சுக் காற்றில் குறைவு மற்றும் விரிவடைந்த மார்பு. எனினும், காற்று வழிப்பாதைகளின் சுருக்கம் எப்போதுமே உயிருக்கு ஆபத்தானதாக இருப்பதில்லை மேலும் சிகிச்சைகள் கிடைக்கப்பெறுகிறது. எம்பிசிமாவைக் கொண்டிருக்கும் பெரும்பாலான நபர்கள் புகைப்பிடிப்பவர்களாக இருக்கிறார்கள். எம்பிசிமாவால் ஏற்படும் சேதமானது அவர்கள் புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகும் நிரந்தரமாக இருக்கும். இந்த நோயைக் கொண்டிருக்கும் நபர்கள் போதிய அளவு பிராணவாயுவைப் பெறுவதில்லை மேலும் தங்கள் உடலிலிருந்து கரியமில வாயுவை வெளியேற்ற முடிவதில்லை, அதனால் அவர்கள் எப்போதுமே மூச்சுக் குறைப்பாடு கொண்டிருப்பார்கள்.

காரணங்கள்

எம்பிசிமா ஏற்படுவதற்கான முதன்மையான காரணமாக இருப்பது சிகரெட் புகைப்பது தான். சில நிலைமைகளில் அது ஆல்பா 1-ஆன்டிட்ரைப்சின் பற்றாக்குறையினாலும் (இது ஒரு பால்சாரா நிறப்புரி தொடர்பான மரபணுக் குறைபாடு)கூட ஏற்படலாம். A1AD யின் தீவிரமான நிலைகளில் கல்லீரல் அரிப்பும் கூட ஏற்படலாம், இங்கு சேர்ந்துவிட்ட A1AT தசைநார்க்குரிய எதிர்விளைவுகளுக்குக் கொண்டுசெல்லும்.

நோய்க்கூறுகள்

புகைப்பிடித்தல் பண்புக்குரிய சென்ட்ரிலோபுலர் எம்பிசிமாவை நுரையீரலின் நோய்குறியாய்வு காட்டுகிறது. நிலையான, வெட்டப்பட்ட மேற்பகுதி கனமான கருப்பு கரியமில வண்டலால் வரிசைப்படுத்தப்பட்டுள்ள பன்மடங்கு வெற்றிடங்களைக் காட்டும் மிக அருகில் எடுக்கப்பட்ட படம்.(CDC/டாக்டர். எட்வின் பி. ஈவிங், ஜூனியர், 1973)

வழக்கமாக மூச்சுவிடும்போது காற்று மூச்சுக்குழாயின் இரு பிரிவுகள் மூலம் உள்ளிழுக்கப்பட்டு, நுண்குழாய்களால் சூழப்பட்ட சிறு மூச்சுப்பைகளான மூச்சுச்சிற்றறைகளில் செலுத்தப்படுகிறது. மூச்சுச்சிற்றறைகள் ஆக்சிசனை (உயிர்வளியை) உறிஞ்சிக்கொண்டு அதைப் பின்னர் இரத்தத்திற்குள் மாற்றிவிடுகிறது. சிகரெட் புகை போன்ற நச்சுத்தன்மைப் பொருள்கள் நுரையீரலுக்குள் இழுக்கப்படும்போது அந்த கெடுதல்மிக்க துகள்கள் மூச்சுச்சிற்றறைகளில் சிக்கிக்கொண்டு உள்ளார்ந்த உடல் அழற்சி உண்டுபண்ணுகிற ஒரு செயலை ஏற்படுத்துகிறது. உடல் அழற்சி உண்டுபண்ணுகிறபோது வெளியிடப்படும் வேதிப்பொருள்கள் (எ-டு: எலாசுட்டேசு (elastase)) முடிவில் மூச்சுச்சிற்றறைகளின் இடைப்பகுதியைச் சிதைத்துவிடக்கூடும். செப்டல் முறிவு என்று அறியப்படும் இந்த நிலைமை நுரையீரலின் கட்டுமானத்தின் குறிப்பிடும்படியான உருக்குலைவுக்கு இட்டுச் செல்லும்.[5] இந்த உருக்குலைவுகள், வளிப் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படும் மூச்சுச்சிற்றறைகளின் மேற்பரப்பு பகுதியைப் பெருமளவுக்குக் குறைத்துவிடும். கார்பன் மோனாக்சைடுக்கான நுரையீரலின் மாற்றல் காரணியை (TLCO) குறைத்துவிடும் விளைவு உண்டாகும். குறைந்துவிட்ட மேற்பரப்புப் பகுதியை இணங்கிப் போகச் செய்வதற்கு நெஞ்சுக்கூடு விரிவாக்கம் (பீப்பாய் மார்பௌ (barrel chest)) மற்றும் உதரவிதானம் சுருங்குதல் (தட்டையாக்குதல்) நடைபெறுகிறது. மூச்சு வெளியிடுதல் பெருமளவில் நெஞ்சுக்கூடு மற்றும் அடிவயிற்றுத் தசை செயல்களையே சார்ந்திருக்கிறது, குறிப்பாக மூச்சு வெளியிடுதல் முடிவுறும் கட்டத்தில். குறைந்துவிட்ட காற்றோட்டம் காரணமாக, கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடும் திறன் குறிப்பிடத்தக்க வகையில் குறைவுபடுகிறது. சில மிகத் தீவிரமான நிலைகளில் ஆக்சிசன் (உயிர்வளி) உள்ளெடுப்பும் கூட குறைவுபடுகிறது.

மூச்சுச்சிற்றறைகள் தொடர்ந்து சீர்கெட்டுவரவும், அதிகரித்த காற்றோட்டத்தால் மிகவிரைவாகச் சுருங்கி வரும் மேற்பரப்புப் பகுதிக்கு ஈடுகொடுக்க முடிவதில்லை, மேலும் உடலால் இரத்தத்தில் போதிய அளவு உயிர்வளி (ஆக்சிசன்) நிலைகளைப் பராமரிக்க முடிவதில்லை. உடலின் இறுதித் தீர்வாக இருப்பது பொருத்தமான குழாய்களின் விட்டத்தைக் குறைப்பதாக இருக்கும். இது நற்குருதிக்குழாய் (தமனி இரத்த) அழுத்ததத்தை உண்டாக்குகிறது, இது நுரையீரலுக்கு உயிர்வளியற்ற (ஆக்சிசனற்ற) இரத்தத்தை அனுப்புவதற்கு பொறுப்பாக இருக்கும் இதயத்தின் வலப்புறத்துக்கு அதிகரித்த பளுவை உண்டாக்குகிறது. அதிக இரத்தத்தை அனுப்புவதற்காக இதய தசைகள் தடித்துவிடுகிறது. இந்த நிலைமை பெரும்பாலும் கழுத்து பெருநாளங்கள் விரிவடைதல் தோற்றத்துடனேயே உடன் வரும். இறுதியில், இதயம் தொடர்ந்து தோல்வியுறுவதால் அது பெரியதாகி இரத்தம் கல்லீரலுக்குச் சென்றுவிடுகிறது.

ஆல்பா 1-ஆன்டிட்ரைப்சின் பற்றாக்குறை (A1AD) உடைய நோயாளிகள் பெரும்பாலும் எம்பிசிமாவால் துன்பப்ப்படுவார்கள். மூச்சுச்சிற்றறைகள் திசுக்களை அழிப்பதற்கு உடல் அழற்சி உண்டுபண்ணுகிற நொதிகளை (எலாசுட்டேசு போன்றவைகள்) A1AD அனுமதிக்கிறது. பெரும் A1AD நோயாளிகள் மருத்துவம் சார்ந்த முக்கியத்துவமுடைய எம்பிசிமாக்களைப் பெறுவதில்லை ஆனால் புகைபிடித்தல் மற்றும் தீவிரமாகக் குறைந்துவிட்ட A1AT நிலைகள் (10-15%) இளம் வயதிலேயே எம்பிசிமாவை ஏற்படுத்தும். A1AD மூலம் ஏற்படும் எம்பிசிமா வகை பானாசினார் எம்பிசிமா என்றழைக்கப்படுகிறது (இது ஒட்டுமொத்த சுரப்பி நுண்ணறையையும் உள்ளடக்கியிருக்கிறது), புகைப்பிடிப்பதால் ஏற்படும் சென்ட்ரிலோபுலார் எம்பிசிமாவுக்கு நேர் எதிரானது. பானாசினார் எம்பிசிமா பொதுவாக நுரையீரலின் அடிப்பாகத்தைப் பாதிக்கிறது அதேநேரத்தில் சென்ட்ரிலோபுலார் எம்பிசிமா நுரையீரலின் மேல்பாகத்தைப் பாதிக்கிறது. ஒட்டுமொத்த எம்பிசிமாவில் சுமார் 2% A1AD ஆல் ஏற்படுகிறது. A1AD யைக் கொண்டிருக்கும் புகைப்பிடிப்பாளர்கள் எம்பிசிமா ஏற்படுவதற்கான பெரும் இடர்ப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். மிதமான எம்பிசிமா அவ்வப்போது சிறிது கால நேரத்திலேயே (1–2 வாரங்கள்) ஒரு தீவிரமான நிலையாக உருவாகலாம்.

A1AD, நோயின் வளரும் வகை பற்றி சில தெளிவுத்தன்மையை வழங்கும் அதே நேரத்தில் பரம்பரையாக வரும் A1AT பற்றாக்குறை, நோயின் ஒரு சிறு அளவாகவே இருக்கிறது. கடந்த நூற்றாண்டின் பெரும்பகுதி ஆய்வுகள், நியூட்ரோபில்சில் காணப்படும் ஒரு செரைன் புரோடீசு ஆன லியூகோசைட் எலாசுட்டேச்சின் (நியூட்ரோபில் எலாசுட்டேசு என்றும் அறியப்படுவது) நோயில் காணப்படும் இணைப்பு திசுவின் சேதத்திற்கான முதன்மை காரணியாக இருக்கும் என்னும் உத்தேசமான பங்களிப்பு பற்றியே முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டு வந்திருக்கிறது. A1AT க்கான முதன்மை ஆதாரமாக இருப்பது நியூட்ரோபில் எலாசுட்டேசுதான் என்னும் ஆராய்ச்சியின் விளைவாக ஏற்பட்ட இந்தக் கற்பிதக் கொள்கை மற்றும் A1AT தான் நியூட்ரோபில் எலாசுட்டேசின் முதன்மைத் தடையாக இருப்பது ஆகிய இரண்டும் இணைந்து "புரோடீசு-ஆண்டிப்ரோட்டீசு " கோட்பாடு என்று அறியப்படுகிறது, இந்த நோயின் ஒரு முக்கிய இடையீடாக இருப்பது நியூட்ரோபில்சு என்று குறிப்பிடுகிறது. எனினும், மிக அண்மைய ஆய்வுகள் பரம்பரையற்ற எம்பிசிமாவின் உருவாக்கத்தில் நியூட்ரோபில் எலாசுட்டேசைக் காட்டிலும் பல இதர எண்ணற்ற புரோட்டீசெசுகளில் ஏதோவொன்று, குறிப்பாக மாட்ரிக்ஃசு மெடலோப்ரோட்டீசெசுகள் தான் கிட்டத்தட்ட அல்லது அதிகமாக தொடர்புடையதாக இருக்கும் வாய்ப்பினைக் கொண்டிருப்பதாகக் காட்டுகின்றன.

கடந்த சில பத்தாண்டுகளின் பெரும் பகுதி எம்பிசிமாவின் வளரும் வகை பற்றிய ஆராய்ச்சி விலங்கு பரிசோதனையை உள்ளடக்கியிருந்தது, இங்கு பல்வேறு விலங்கு இனங்களின் மூச்சுக்குழாய்களில் பல்வேறு புரோட்டீசெசுகள் பதியப்பட்டன. இந்த விலங்குகளுக்கு இணைப்பு திசு சேதங்கள் ஏற்பட்டன, இதுதான் புரோட்டீசு-ஆண்டிப்ரோடீசுக் கோட்பாடுகளுக்கான ஆதரவாகக் கொள்ளப்பட்டது. எனினும், இந்தக் கருப்பொருள்கள் நுரையீரலில் இருக்கும் இணைப்பு திசுக்களை அழித்துவிடும் என்ற காரணத்தாலேயே, யார் ஒருவருமே ஊகித்துவிடுவதைப் போல், அது உயிர்இழப்புகளை ஏற்படுத்துவதில்லை. மிகச் சமீபத்திய பரிசோதனைகள், மரபணுக்களைக் கையாளுதலை உள்ளடக்கியவை போன்ற கூடுதல் தொழில்நுட்பமுறையில் மேம்பட்ட அணுகுமுறைகளில் கவனம் செலுத்திவருகிறது. நோயைப் புரிந்துகொள்வதில் நமக்கு இருக்கும் புரிதல் தொடர்பாக குறிப்பிட்ட முன்னேற்றமாக இருப்பது புரோட்டீசு "நாக்-அவுட்" விலங்குகளின் உற்பத்தி, இவை ஒன்று அல்லது கூடுதல் புரோட்டீசுகளில் மற்றும் நோய் வளர்ச்சிக்கு அவைகள் குறைவாகவே எளிதில் பாதிக்கப்படுமா என்பதான மதிப்பீடுகள் மரபியல் நோக்கில் பற்றாக்குறையுடன் இருக்கிறது. நல்வாய்ப்பில்லாமல் இந்த நோயைப் பெரும் தனிநபர்கள் பெரும்பாலும் குறைந்த வாழ்நாளையே கொண்டிருக்கிறார்கள், அதிக அளவாக 0-3 ஆண்டுகள் வரையே உயிர்வாழ்கிறார்கள்.

நோய் கண்டறிதல்

எம்பிசிமாவின் ஒரு தீவிரமான நிலை.

நோய் கண்டறிதல் வழக்கமாக தமனி செயல்பாட்டு பரிசோதனை மூலம் (எ-டு: ஸ்பைரோமெட்ரி) உறுதிசெய்யப்படுகிறது; எனினும் எக்ஸ்ரே ஊடுகதிர் படமெடுப்பு நோய் கண்டறிதலில் உதவிகரமாக இருக்கலாம்.

முன்கணித்தல் மற்றும் சிகிச்சை

எம்பிசிமா மாற்ற இயலாத சீர்கேடுறச்செய்யும் ஒரு நிலைமை. அதனுடைய வளர்ச்சியை மிதப்படுத்துவதற்கான ஒரு மிக முக்கிய நடவடிக்கையாக நோயாளி மேற்கொள்ளவேண்டியது புகைப்பிடித்தலை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் மற்றும் சிகரெட் புகை மற்றும் நுரையீரல் எரிச்சலூட்டிகள் அனைத்திலிருந்தும் உள்ளாகாமல் தவிர்த்தல். நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை அனுகூலமானதாக ஆக்கவும் மற்றும் நோயாளி தன்னுடைய நலத்தை எவ்வாறு செயலூக்கத்துடன் நிர்வகிப்பது என்பதைக் கற்றுத்தரவும் தமனி சீர்படுத்துதல் மிகவும் பயனுடையதாக இருக்கும். வேறு எந்த பலவீனப்படுத்தும் நோயைக் கொண்டிருக்கும் நோயாளிகளை விடவும் எம்பிசிமா மற்றும் நீண்டகால மார்புச் சளி நோயாளிகள் தங்களுக்கு வேண்டியதை தாங்களே செய்துகொள்ளலாம்.

ஆன்டிகோலினெர்ஜிக்ஸ், ப்ராங்காடிலேடர்ஸ் மூலம் சுவாசித்தல், ஸ்டீராய்ட் மருந்துகள் (சுவாசித்தல் அல்லது வாய்வழியாக) பயனளிக்கக்கூடிய வகையில் உடலை நிலைப்படுத்துதல் (ஹை ஃபௌலர்கள்) மற்றும் தேவைக்கு ஏற்ப கூடுதலான பிராண வாயு முதலான உதவிகளுடனும் கூட எம்பிசிமா சிகிச்சையளிக்கப்படுகிறது. இரைப்பை ரிஃப்ளக்ஸ் மற்றும் ஒவ்வாமைகள் உட்பட நோயாளிகளின் இதர நிலைமைகளுக்குச் சிகிச்சை அளிப்பதன் மூலமும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தலாம். பரிந்துரைக்கப்பட்ட வகையில் பயன்படுத்தப்படும் கூடுதல் பிராணவாயு (வழக்கமாக ஒரு நாளைக்கு 20 மணி நேரத்திற்கு மேல்) மட்டும் தான் எம்பிசிமா நோயாளிகளிடத்தில் வாழ்நாளை நீட்டிக்கச் செய்யும் அறுவை சிகிச்சையற்ற சிகிச்சைமுறையாக இருக்கிறது. நோயாளிகளுக்கு அதிகரித்த நகரும் தன்மையை அனுமதிக்கும் கனமற்ற கையடக்க பிராண வாயு அமைப்புகள் இருக்கின்றன. கூடுதல் பிராணவாயுவைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போதே நோயாளிகள் வான், நீர் வழி பயணங்களை மேற்கொள்ளலாம் மற்றும் வேலை செய்யலாம். இதர மருந்துமாத்திரைகள் ஆராயப்பட்டு வருகிறது.

நுரையீரல் கொள்ளளவு குறைப்பு அறுவைசிகிச்சை (LVRS), கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறிப்பிட்ட நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம். அது பல வழிமுறைகளில் செய்யப்படலாம், அவற்றுள் சில குறைந்த அளவு வரம்பு மீறியதாக இருக்கும். நோய்வாய்ப்பட்ட நுரையீரல் பகுதிகளுக்குச் செல்லும் பாதைகளில் சிறு வால்வ்களை இடம்பெறச் செய்து செய்யப்பட்ட ஒரு புதிய சிகிச்சைமுறை நல்ல பலனைக் கொடுப்பதாக 2006 ஆம் ஆண்டு ஜூலையில் அறிவிக்கப்பட்டது, ஆனால் 7% நோயாளிகள் பகுதி நுரையீரல் பலவீனமடைதலை அனுபவித்தார்கள். எம்பிசிமாவுக்காக அறியப்பட்ட ஒரே "குணப்படுத்தல்" நடவடிக்கையாக இருப்பது மாற்று நுரையீரல், ஆனால் அந்த அறுவைசிகிச்சையை உடல் ரீதியாகத் தாங்கும் வலிமைகொண்டவர்கள் ஒரு சில நோயாளிகளே. நோயாளியின் வயது, பிராணவாயு இழப்பு மற்றும் எம்பிசிமா சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்ட மருந்துமாத்திரைகளின் பக்கவிளைவுகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு சிறுநீரகங்கள், இதயம் மற்றும் இதர உடல் உறுப்புகளுக்குச் சேதத்தை ஏற்படுத்தலாம். உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்கு நோயாளி ஒரு ஆன்டி-ரிஜெக்ஷ்ன் டிரக் ரெஜிமென் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையைக் கொண்டிருக்கிறது, இது நோய் எதிர்ப்பு அமைப்பை உள்ளடக்கிவைத்து நோயாளியிடத்தில் கிருமி நோய்தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நோயைப் பெற்றுள்ளதாக எண்ணும் நோயாளிகள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மருத்துவ கவனிப்பை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

ஆராய்ச்சி

யூரோப்பியன் ரெஸ்பிரேடரி ஜர்னலால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு விட்டமின் ஏ மூலம் கிடைக்கப்பெறும் டிரெடினாய்ன் (முகப்பரு எதிர்ப்பு மருந்தான இது வர்த்தகரீதியாக ரெடின்-ஏ என்ற பெயரில் கிடைக்கப்பெறுகிறது), மூச்சுச்சிற்றறைக்கு மீள்சக்தியைத் திரும்ப அனுப்புவதன் மூலம் (மற்றும் மரபணு இடையீடு மூலம் நுரையீரல் திசுவை மீண்டும் உருவாக்குதல்) எலிகளிடத்தில் எம்பிசிமாவின் பாதிப்புகளை திரும்பப்பெறலாம் என்று ஆலோசனை கூறுகிறது.[6][7]

விட்டமின் ஏ உட்கொள்வது பலனளிக்கக்கூடிய சிகிச்சையாக அல்லது நோய் தடுப்பானாக இருப்பதாக அறியப்படாத போதும், இந்த ஆராய்ச்சி எதிர்காலத்தில் குணப்படுத்தும் நிலைக்குக் கொண்டு செல்லும். 2010 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பின்தொடர்ந்த ஆய்வு, மனிதர்களிடத்தில் எம்பிசிமாவுக்கான சிகிச்சையில் விட்டமின் ஏ (ரெடினோயிக் அமிலம்) பயன்படுத்துவதில் எந்தவிதமான முடிவுக்கும் வரமுடியாததாக இருப்பதைக் கண்டறிந்தது ("எந்தவித உறுதியான மருத்துவ ஆதாயங்களும் இல்லை") மேலும் இந்த சிகிச்சைக்கான முடிவுகளுக்கு வருவதற்கு மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது என்று தெரிவித்தது.[8]

குறிப்பிடத்தக்க நோயாளிகள்

எம்பிசிமா நோயாளிகளில் உள்ளடங்கும் குறிப்பிடத்தக்கவர்கள் அவா கார்ட்னர், டான் கார்னெல், ஸ்பென்சர் டிரேசி,[9] லியோனார்ட் பெர்ன்ஸ்டீய்ன், எட்டீ டீன்,[10] டீன் மார்டின், நார்மென் ராக்வெல், சாமுவெல் பெக்கெட், ஜானி கார்சன், அல் காப், டி.எஸ்.எலியட், தல்லுல்லாஹ் பாங்க்ஹெட், டிக் யார்க், ஜேம்ஸ் ஃப்ரான்சிஸ்கஸ், ஆர்.ஜெ.ரேய்னால்ட்ஸ், ஆர்.ஜெ.ரேய்னால்ட்ஸ் ஜூனியர், ஆர்.ஜெ.ரேய்னால்ட்ஸ் III,[11] டான் ஐமஸ்,[12] ஐக் டர்னர், சார்லீ சிம்ப்சன், யோசெஃப் ஹயிம் யெருஷால்மி, எலிசெபெத் டான், ஜெர்ரி ரீட், போரிஸ் கார்லோஃப், லியோனிட் ப்ரெஸ்னேவ் மற்றும் ஆமி வைன்ஹவுஸ்.[13]

கூடுதல் உருவங்கள்

மேலும் பார்க்க

  • பாராசெப்டால் எம்பிசிமா
  • சப்குடேனியஸ் எம்பிசிமா

அடிக்குறிப்புகள்

  1. எம்பிசிமா அட்டிக்சனரி.காம்
  2. 2.0 2.1 2.2 2.3 "Emphysema". Retrieved 2010-01-20.
  3. Anderson AE, Foraker AG (September 1973). "Centrilobular emphysema and panlobular emphysema: two different diseases". Thorax 28 (5): 547–50. doi:10.1136/thx.28.5.547. பப்மெட்:4784376. பப்மெட் சென்ட்ரல்:470076. http://www.pubmedcentral.nih.gov/articlerender.fcgi?tool=pubmed&pubmedid=4784376. 
  4. 4.0 4.1 4.2 eMedicine Specialties > Radiology > Pediatrics --> காஞ்செனிட்டல் லோபர் எம்பிசிமா ஆசிரியர்: பீவர்லி பி வுட், எம்டி, எம்எஸ், பிஹெச்டி, யூனிவர்சிடி ஆஃப் சதர்ன் கலிஃபோர்னியா. புதுப்பிக்கபட்டது: டிசம்பர் 1, 2008
  5. "SURGICAL PHYSIOPATHOLOGY OF EMPHYSEMA AND LUNG VOLUME REDUCTION".
  6. Mao J, Goldin J, Dermand J, Ibrahim G, Brown M, Emerick A, McNitt-Gray M, Gjertson D, Estrada F, Tashkin D, Roth M (1 March 2002). "A pilot study of all-trans-retinoic acid for the treatment of human emphysema". Am J Respir Crit Care Med 165 (5): 718–23. பப்மெட்:11874821. http://ajrccm.atsjournals.org/cgi/content/full/165/5/718. பார்த்த நாள்: 14 மே 2010. 
  7. "Vitamin may cure smoking disease". BBC News. 22 December 2003. http://news.bbc.co.uk/2/hi/health/3329103.stm. பார்த்த நாள்: 2006-11-18. 
  8. Roth M, Connett J, D'Armiento J, Foronjy R, Friedman P, Goldin J, Louis T, Mao J, Muindi J, O'Connor G, Ramsdell J, Ries A, Scharf S, Schluger N, Sciurba F, Skeans M, Walter R, Wendt C, Wise R (2006). "Feasibility of retinoids for the treatment of emphysema study". Chest 130 (5): 1334–45. doi:10.1378/chest.130.5.1334. பப்மெட்:17099008. http://www.chestjournal.org/cgi/content/full/130/5/1334. பார்த்த நாள்: 2010-05-14. 
  9. "Spencer Tracy". Hollywood.com. Archived from the original on 2013-01-03. Retrieved 2009-09-12.
  10. "Eddie Dean Obituary". Allbusiness.com. Archived from the original on 29 அக்டோபர் 2007. Retrieved 14 March 2009.
  11. ""Death from Smoking in the R. J. Reynolds Family by Patrick Reynolds"". Tobaccofree.org. Archived from the original on 2010-11-26. Retrieved 2009-09-12.
  12. ""Don Imus's Last Stand: Politics & Power"". Vanityfair.com. 2009-01-06. Retrieved 2009-09-12.
  13. music (2008-10-27). ""Amy Winehouse rushed to hospital"". Entertainment.uk.msn.com. Archived from the original on 2008-10-30. Retrieved 2009-09-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

புற இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya