எம். ஆர். சந்தானம்
எம். ஆர். சந்தானம் (13 மே 1918 – 25 மார்ச் 1970) பழம்பெரும் தமிழ் நாடக, திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமாவார். இவர் தயாரித்த பாசமலர், அன்னை இல்லம் போன்ற திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. 50 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நகைச்சுவை, குணசித்திர, வில்லன் வேடங்களில் நடித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் எழுத்தில் உருவான சொர்க்க வாசல் திரைப்படத்தில் பூங்காவனம் என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழடைந்ததால், இவர் பூங்காவனம் சந்தானம் என்றும் அழைக்கப்பட்டார்.[1]. திரைக்கலைஞர்கள் ஆர். எஸ். சிவாஜி, சந்தான பாரதி ஆகியோர் இவருடைய பிள்ளைகள் ஆவர். வாழ்க்கைக் குறிப்புஇவர் ஆர். எஸ். ராமசாமி கவுண்டர், நாச்சியார் ஆகியோரின் 12 பிள்ளைகளில் 11-வது மகவாக[1] 1918 மே 13 இல் பிறந்தார். இவரது நெருங்கிய நண்பர் டி. எஸ். துரைராஜ் மூலமாகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.[1] 1945-இல் மீரா திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.[1] குடும்பம்1945-இல் இவர் ராஜலட்சுமி என்பவரைத் திருமணம் புரிந்தார்.[1] இவர்களுக்கு வசந்தா, காந்திராஜ், சந்தான பாரதி, மங்கையற்கரசி, ஆர். எஸ். சிவாஜி என்ற ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.[1] இவர்களில் ஆர். எஸ். சிவாஜி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சந்தானபாரதி திரைப்பட இயக்குநர் ஆவார். நடித்த திரைப்படங்கள்
தயாரித்த திரைப்படங்கள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia