எம். எம். சந்திர மௌலிஎம். எம். சந்திர மௌலி (MM Chandramouli) என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமாவார். வாழ்க்கைஇவர் ஆந்திரப் பிரதேசம், சித்தூரைச் சேர்ந்தவர். ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்த இவர், சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு மற்றும் திரைப்பட தயாரிப்புப் பிரிவுகளில் தேர்வுபெற்றார். பின்னர் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அவர் இயக்கிய தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். அதன்பிறகு பல்வேறு இந்தியத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சில தொடர்களைத் தயாரித்தார். 2010 வாக்கில் அமெரிக்காவின் நியூயார்க்கில் குடியேறினார். அங்கே தொலைக்காட்சித் தொடர்கள், சில ஹாலிவுட் படங்கள், விளம்பரங்களில் பணிபுரிந்து, திரைப்பட விநியோகத்திலும் ஈடுபட்டார். அதன்பிறகு சென்னை திரும்பிய இராஜமௌலி 100% காதல் என்ற படத்தை இயக்கினார்.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia