எம். ஏ. எம். ராமசாமி
எம். ஏ. எம். ராமசாமி (M. A. M. Ramaswamy), (செப்டம்பர் 30, 1931 – டிசம்பர் 2, 2015), செட்டிநாடு குழும நிறுவனங்களின் கூட்டுத்தாபகரும், தலைவரும் ஆவார். கர்நாடக மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதியுமாவார்.[1] புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் இணைவேந்தராகவும் பணியாற்றினார்.[2] சிறந்த தொழிலதிபராகவும்[3] 500 குதிரை பந்தயங்களை வென்றவராகவும்[4] விளங்கியவர். வாழ்க்கையும்,கல்வியும்இவர் பிறந்தது சென்னையில் (செட்டிநாடு இல்லம்). தந்தை எம். ஏ. முத்தையா செட்டியார். தாயார் ராணி லேடி மெய்யம்மை ஆச்சி. படிப்பு சர்ச் பார்க் ஆங்கிலப்பள்ளி, சாந்தோம் உயர் நிலைப்பள்ளி, பி.எஸ். உயர்நிலைப் பள்ளி, சென்னை விவேகானந்தா கல்லூரியில் பி.ஏ. பட்டம்.[5] பணிகள்விளையாட்டுத் துறையில் ஈடுபாடு கொண்ட ராமசாமி தனது பெரும்பகுதி நேரத்தை குதிரைப் பந்தயங்களில் செலவிடுகிறார். இவர் இந்திய வளைத்தடி கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோதே இந்திய அணி தனது ஒரே உலகக்கோப்பை வாகையர் பட்டத்தை வென்றது. அறக்கட்டளைஎம்.ஏ.எம்.ராம சாமி செட்டியார் தனது 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் செட்டிநாடு அறக்கட்டளையை நிறுவியதுடன், அதன் தலைவராக ஸ்பிக் சேர்மன் ஏ. சி. முத்தையா செட்டியாரையும் நியமித்துள்ளார்.[6] மறைவு2 திசம்பர் 2015 அன்று உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் தனது 84வது அகவையில் காலமானார்.[7] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia