எம். ஜி. ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்

எம். ஜி. ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் என்பது தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் நடத்தப் பெறும் ஒரு கல்வி நிறுவனமாகும். சென்னை, தரமணியில் அமைக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பிற்கு உதவும் பல பயிற்சிகளை அளிக்கும் மூன்று ஆண்டுகள் கால அளவிலான பட்டயப் படிப்புகள் மற்றும் ஓராண்டு அளவிலான நடிப்பு போன்ற சான்றிதழ் படிப்புகளும் கற்றுத் தரப்படுகின்றன.

பட்டயப் படிப்புகள்

இந்தப் பயிற்சி நிறுவனத்தில் கற்றுத்தரும் பட்டயப் படிப்புகள் மூன்று ஆண்டு கால அளவுடையது.

  1. திரைப்படம் இயக்குதல், திரைக்கதை, வசனம் எழுதுதல் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பு
  2. திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பு (ஒளிப்பதிவு)
  3. திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பு (படச்சுருள் செயல்படுத்தல்)
  4. திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பு (ஒலிப்பதிவு மற்றும் ஒலிப் பொறியியல்)
  5. படத்தொகுப்பு மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பு

சான்றிதழ் படிப்பு

இந்தப் பயிற்சி நிறுவனத்தில் ஓராண்டு அளவில் கற்றுத்தரும் சான்றிதழ் படிப்பு உள்ளது.

  1. நடிப்புப் பயிற்சி
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya