எம். பி. நிர்மல் (M. B. Nirmal) சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கையாளும் இந்தியாவின்தமிழ்நாட்டின்சென்னையில் ஒரு குடிமை இயக்கமாக இருக்கும் எக்ஸ்னோரா இன்டர்நேஷனலின் நிறுவனரும் தலைவரும் ஆவார்.[2][3][4] எக்ஸ்னோராவில் இவரது ஈடுபாட்டைத் தவிர, நுகர்வோர் வக்காலத்து, காடு வளர்ப்புத் திட்டங்கள், குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பது போன்றவற்றிலும் நிர்மல் ஈடுபட்டுள்ளார்.[5]
வட அமெரிக்காவின் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினரான 40 வருடங்களான நியூயார்க் தமிழ் சங்கத்தால் எம். பி.நர்மலுக்கு தமிழ் ரத்னா விருது வழங்கப்படுகிறது.1978 இல் சோகந்தி என்ற கிராமத்தில் "ஒரு குடிசை - ஒரு ஒளி" திட்டம் செயல்படுத்தப்பட்டது. "ஒரு குடிசை - ஒரு ஒளி" திட்டம் இந்தியாவில் முதன்முறையாக சோகந்தி கிராமத்தில் 1978 ஆம் ஆண்டில் செங்கல்பட்டு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் மேலாளராக எம். பி. நிர்மல் இருந்தார். முன்னாள் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் தலைமையில் நடந்த ஒரு விழாவில், நிர்மல் பின்னால் அமர்ந்திருக்கிறார்.
ஆசிரியர் / எழுத்தாளர்
தனிநபர் மற்றும் சமூக வளர்ச்சிக்காக தமிழில் பன்னிரண்டு புத்தகங்களையும் ஆங்கிலத்தில் ஆறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். முன்னணி பத்திரிகைகளில் தவறாமல் எழுதி வருகிறார்.
"இன்றைய கதாநாயகன்" (Hero for Today) மற்றும் மக்களை ஒன்று சேர்த்துச் சேவையில் ஈடுபட வைக்கும் பேராற்றல் உடைய அப்பழுக்கற்ற உயர்ந்த குணம் உள்ள தலைவர்– ரீடர்ஸ் டைஜெஸ்ட்"(Reader’s Digest)
"இந்தியாவை மாற்றும் பத்து தேவதைகளின் ஒருவர்" (அட்டைப்படம்) - "இந்தியா டுடே" (India Today)
"அன்னை தெரேசா, சுந்தர் லால் பகுகுணா ஆகியோருடன் சேர்த்து இந்தியாவின் எட்டு வழிக்காட்டுகளில் ஒருவர்" - ரோட்டரியின் "இன்னர் வீல் சங்கம்" (Rotary Inner wheel)
"தலைச் சிறந்த சாதனையாளர்" – "இந்து" (The Hindu)
"இந்தியாவின் நட்சத்திரம்" (Star of India) - "விஸ்டம்"
மத்திய அரசின் சுற்றுப்புறச் சுகாதாரம் மற்றும் வனத்துறையின் முன்னாள் ஆலோசனை வல்லுனர்
அரசின் காபி போர்டு இயக்குநர்
தேசிய அளவிலான முப்பதுக்கும் மேற்பட்ட பயிற்சி நிலையங்களால் தொடர்ந்து மனித முன்னேற்றம், மூளை சக்தி வளர்ச்சி (Brain Resources Development) உள் நோக்கம், உந்துதல் (Motivation) போன்ற பல தலைப்புகளில் போன்ற பயிற்சி உரையாற்ற அழைக்கப்படுகிறார். மலேசியா, ஹாங்காங், இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏராளமான பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளார்.
ஏழாவது அறிவு (7th Sense) பயிற்சி அளிப்பதன் மூலம் “புதுமை பயிற்சியாளர்” என்ற பாராட்டினையும் பெற்றவர். மலேசியா நாட்டிலும், அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும் பயிற்சி உரையாற்றி பாராட்டுக்களை குவித்தவர்.
அமெரிக்க நாட்டின் “சிறந்த புதுமையாளர்” (Innovator) விருதினையும், ரொக்கப் பரிசினையும் 1990ஆம் ஆண்டு பெற்றவர். (Ashoka, Innovator for Public USA)
அமெரிக்காவின் அனைத்து தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் FeTNA & TNF “சிறந்த தமிழர்” (1998) என்ற விருதினையும்,
இந்திய வங்கிகளில் பணிபுரியும் அனைத்து வங்கி மேலாளர்களிலும் மிகச் சிறந்த மேலாளர் என்ற “இந்திராகாந்தி தேசிய விருதி” னையும் பெற்றவர்.
”சிறந்த எழுத்தாளர்” என்று “சாவி” தமிழ் வார இதழில் பரிசினைப் பெற்றவர்.
விலங்குகளுக்குப் பராமரிப்பும், பாதுகாப்பும் அளிக்கும் “பாரதிய பிராணி மித்ரா” (MANIMAL) சங்கத்தின் தலைவர்.
”பரம சாந்தி நிலையம்” என்ற இயக்கத்தின் தலைவர். இந்த அமைப்பு மயான பூமியைத் தூய்மைப்படுத்தி, அழகுப்படுத்தி, பசுமைப்படுத்தி பராமரித்து வருகிறது.
நிர்மல் ஒரு சமூக நீதிப் போராளி. ஒதுக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களின் முன்னேற்றத்திற்காக பல சேவைகளை செய்து வருகிறார். எண்ணற்ற ஆவணப்படங்களை எடுத்துள்ளார். இவருக்கு பல்வேறு உலக அமைப்புகள், பத்திரிகைகள் பல பட்டங்களும் விருதுகளும் அளித்துள்ளார்கள். அதில் மிக முக்கியமானது: இவரால் தோற்றுவிக்கப்பட்ட “முன் தோன்றிய தமிழர்கள்” மற்றும் “முதல் தமிழர்கள்” “பறையர் சமூகத்தினர்” இவருக்கு அளித்த “சமத்துவப் பெரியார்” என்ற பட்டம்.