எம். விசயசாரதி

ம. விசயசாரதி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்வி. கே. இராசு
பின்னவர்வி. கே. இராசு
தொகுதிஅரக்கோணம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1954-01-14)14 சனவரி 1954
இறப்பு7 சூன் 2021(2021-06-07) (அகவை 67)
ஆந்திரப்பிரதேசம், சத்தியவேடு
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்தமிழ்நாடு,  இந்தியா
பணிஅரசியல்
சமயம்இந்து

ம. விசயசாரதி (M. Vijayasarathy மறைவு: 7 சூன், 2021) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1980 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] எம். ஜி. இராமச்சந்திரன் தலைமையிலான அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 1984 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் அரசியலில் தீவிரமாக செயல்படாமல் இருந்துவந்தார்.

ஆந்திரமாநிலம் சத்தியவேடு அருகே உள்ள பண்ணை வீட்டில் வசித்துவந்த விசயசாரதி 2021, சூன், 7 அன்று உடல்நலக் குறைவால் தன் 67ஆவது வயதில் இறந்தார்.[2]

வகித்த பதவிகள்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1980 அரக்கோணம் அஇஅதிமுக 48.25

மேற்கோள்கள்

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-05-06.
  2. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.விஜயசாரதி மறைவு, செய்தி, 2021, சூலை, 8. இந்து தமிழ்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya