எம வாகனம்

எம வாகனம்
உரிய கடவுள்: சிவபெருமான்

எம வாகனம் என்பது என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சிவபெருமான் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். எமன் மரணத்தின் அதிபதியாக உள்ளார். அதனால் திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயிலில் மரண பயம்கொண்ட பக்தர்கள் சிவபெருமானை வணங்கினால் மரணபயம் நீங்கும் என்பது ஐதீகமாகும். இதனைக் குறிப்பதற்காக இத்தலத்தில் எம வாகனத்தில் சிவபெருமான் மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் உற்சவம் வருகிறார்.[1]

இவ்வாறு எம வாகனத்தில் சிவபெருமான் ஊர்வலம் வருதலை எம வாகன சேவை என்று அழைக்கின்றனர்.

வாகன அமைப்பு

எம வாகனம் என்பது அகன்ற கண்களும், பெரிய மீசை கொண்டும், இடக்காலை மண்டியிட்டு, வலக்காலை தாங்கியபடியும் அமைக்கப்பட்டுள்ளது. கைகளில் பாசக்கயிற்றையும், சிறிய சூலத்தையும் ஏந்தியவாறும் உள்ளது. மரத்தால் செய்யப்பட்ட வாகனத்தின் வெளிப்புறத் வெள்ளித் தகடுகளால் போர்த்தபட்டுள்ளது.

இவற்றையும் காண்க

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindu Gods Vaganas drawings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள்

  1. ஜெ.கார்த்திக் (2 மார்ச் 2017). "எம பயம் போக்கும் ஈசன்: எம வாகனம் - மார்ச் 3". கட்டுரை. தி இந்து. Retrieved 2 மார்ச் 2017.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya