எரிக் பிரான்சிசு வைசாசு
எரிக் பிரான்சிசு வைசாசு (Eric F. Wieschaus)(ஜூன் 8, 1947இல் இந்தியானாவின் சவுத் பெண்டில் பிறந்தார்) என்பார் அமெரிக்கப் பரிணாம வளர்ச்சி உயிரியலாளர் ஆவார். இவர் 1995ஆம் ஆண்டில் நோபல் பரிசு வென்றவர் ஆவார். ஆரம்ப கால வாழ்க்கைஇந்தியானாவின் சவுத் பெண்டில் பிறந்த இவர் , அலபாமாவின் பர்மிங்காமில் உள்ள ஜான் கரோல் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். தனது இளங்கலை படிப்பினை (பி.எஸ்., உயிரியல்) நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் பயின்றார். யேல் பல்கலைக்கழகத்தில் உயிரியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சியினை மேற்கொண்டார். அறிவியல் பணி![]() 1978 ஆம் ஆண்டில், ஜெர்மனியின் ஐடெல்பெர்கில் உள்ள ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் தனது முதல் சுயாதீன வேலையில் சேர்ந்தார். பின்னர் 1981ஆம் ஆண்டில் ஐடெல்பெர்க்கிலிருந்து அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.[1][2] இவரது ஆராய்ச்சியின் பெரும்பகுதி ட்ரொசோபிலா மெலனோகாஸ்டர் என்ற பழ ஈவில் கருவளர்ச்சி குறித்ததாகு, குறிப்பாக ஆரம்பக்கால டிரோசோபிலா கருவளர்ச்சி குறித்ததாகும். ஆரம்ப நிலை கருவில் உள்ள மரபணு வெளிப்பாடு காரணமாகத் தோன்றிய புரதங்கள் கருவுறாத முட்டையிலும் உள்ளன. எனவே இவை அண்ட உற்பத்தியின் போது தாய்வழி படியெடுத்தல் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கருவில் சிறிய எண்ணிக்கையிலான மரபணு பொருட்கள் படியெடுத்தல் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. வைசாசு கருவில் வெளிப்படுத்திய இந்த "கருமரபணு" செயலில் கவனம் செலுத்தினார். ஏனெனில் இந்த மரபணு வெளிப்பாடு தற்காலிக மற்றும் இடஞ்சார்ந்த முறையில் கரு வளர்ச்சியின் இயல்பான தொடர் வளர்ச்சியினைக் கட்டுப்படுத்தும் தூண்டுதல்களை இவை வழங்கக்கூடும் என்று தெரிவித்தார். சீரற்ற நிகழ்வுகள் மூலம் ஒவ்வொரு குரோமோசோமிலும் சாத்தியமான அனைத்து திடீர் மாற்றப் பிறழ்வுகளின் விளைவாகக் கரு மரணம் நிகழ்வதாக ஆய்வுகள் மூலம் எரிக் வைஷ்சாசு நிருபித்துக்காட்டினார்.[3] இது ஹைடெல்பெர்க் திரை என்று அழைக்கப்பட்டது.[2][4] 1995 ஆம் ஆண்டில், எட்வர்ட் பி. லூயிஸ் மற்றும் கிறிஸ்டியன் நோஸ்லின்-வோல்ஹார்ட் ஆகியோருடன் இணைந்து மருத்துவம் அல்லது உடலியங்களுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. கரு வளர்ச்சியின் மரபணு கட்டுப்பாட்டை வெளிப்படுத்தியதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.[5][6][7][8] 2018ஆம் ஆண்டு நிலவரப்படி, வைசஸ் பிரின்ஸ்டனில் உள்ள மூலக்கூறு உயிரியலில் ஸ்கிவிப் பேராசிரியராக உள்ளார்.[9] இவர் முன்னர் நியூஜெர்சியின் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் (ராபர்ட் வூட் ஜான்சன் மருத்துவப் பள்ளி) உயிர் வேதியியல் இணைப் பேராசிரியராக இருந்தார். தனிப்பட்ட வாழ்க்கைஇவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக மூலக்கூறு உயிரியலாளர் மூலக்கூறு உயிரியல் பேராசிரியர் கெர்ட்ரூட் சுப்பேச்சியை திருமணம் செய்து கொண்டார். இவரும் டிரோசோஃபைலாவில் முட்டையாக்கத்தில் ஆய்வு செய்து வருகிறார். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். வைஷாசு ஒரு நாத்திகர் மற்றும் லூசியானா அறிவியல் கல்விச் சட்டத்தை ரத்து செய்ய 2007 மனுவில் கையெழுத்திட்ட 77 நோபல் பரிசு பெற்றவர்களில் இவரும் ஒருவர்.[10] விருதுகள் மற்றும் மரியாதைகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia