எர்பெர்ட்டு பேக்கர்
சர் எர்பெர்ட்டு பேக்கர், KCIE, FRIBA, (Sir Herbert Baker, சூன் 9, 1862 – பெப்ரவரி 4, 1946) இரு பத்தாண்டுகளுக்கு தென்னாப்பிரிக்க கட்டிடவியலில் பெரும் தாக்கமேற்படுத்திய பிரித்தானியக் கட்டடக் கலைஞர் ஆவார். இவர் புது தில்லியின் மிகவும் அறியப்படும் அரசுக் கட்டிடங்களின் முதன்மை வடிவமைப்பாளராகவும் விளங்கினார். இவர் கென்ட் கவுன்ட்டியின் கோப்யாமில் பிறந்து அங்கேயே இறந்தார். தென்னாப்பிரிக்காவில் இவர் வடிவமைத்த பல தேவாலயங்கள், பள்ளிகள், இல்லங்களில் பிரிடோரியாவின் யூனியன் பில்டிங்சு, ஜோகானஸ்பேர்க்கின் செயின்ட் ஜான்சு கல்லூரி, வையின்பெர்கு ஆண்கள் பள்ளி, கேப்டவுனின் குரூட் ஷூர் ஆகியன குறிப்பிடத்தக்கன. எட்வின் லூட்டியன்சுடன் இணைந்து புது தில்லியின் ராஷ்டிரபதி பவன், நாடாளுமன்றம் தலைமைச் செயலகத்தின் வடக்கு, தெற்கு வளாகங்கள் போன்றவற்றை வடிவமைத்தார். 1931இல் இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய புதுதில்லி பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் தலைமைநகரமாக அமைந்தது; பின்னர் இதுவே இந்தியாவின் தலைநகரமாயிற்று. மேலும் இவர் கென்யாவின் நைரோபியிலுள்ள பிரின்சு ஆப் வேல்சு பள்ளியின் (தற்போது நைரோபி பள்ளி) நிர்வாகக் கட்டிடங்களை வடிவமைத்துள்ளார். இவரது கல்லறை வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் உள்ளது. மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia