எர்மியோன் (ஆர்கோலிஸ்)நவீன கிரேக்கத்தில் எர்மியோனின் அமைவிடம் 37°23′00″N 23°15′13″E / 37.3834°N 23.2535°E எர்மியோன் (Hermione பண்டைக் கிரேக்கம்: Ἑρμιόνη ) [1] அல்லது ஹெர்மியம் அல்லது ஹெர்மியன் (Ἑρμιών அல்லது Ἑρμιῶν [2] ) என்பது ஆர்கோலிசின் தெற்கு முனையில் இருந்த ஒரு நகரமாகும். இது கிரேக்க வரலாற்றின் பாரம்பரிய காலத்தில் ஒரு சுதந்திர நகர அரசாக இருந்தது. மேலும் எர்மியோனிஸ் ( Ἑρμιονίς ) என்ற பெயருடைய ஒரு பிரதேசத்தை உள்ளடக்கியதாக இருந்தது. ஆர்கோலிசின் தெற்கு கடற்கரைக்கும் ஹைட்ரா தீவுக்கும் இடையே உள்ள கடல் இதன் பெயரால் எர்மியோனிடிக் வளைகுடா என்று அழைக்கப்பட்டது. இது ஆர்கோலிக் மற்றும் சரோனிக் வளைகுடாக்களிலிருந்து வேறுபட்டதாகக் கருதப்படுகிறது. கிரேக்கத் தொன்மவியலின்படி, எர்மியோன் திரையோப்சால் நிறுவப்பட்டது. எர்மியோனை இலியட்டில் உள்ள கப்பல்களின் பட்டியலில் ஓமர் அதன் உறவு நகரமான அசினுடன் குறிப்பிடுகிறார். அசீன் மற்றும் ஈயோன் ஆகியவை ஆரம்ப காலத்தில் டோரியர்களால் கைப்பற்றப்பட்டன. ஆனால் எர்மியோன் நீண்ட காலத்திற்குப் பிறகும் ஒரு சுதந்திர டிரையோபியன் அரசாகத் தொடர்ந்தது. எர்மியோன் டிரையோபியன் நகரங்களில் மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது. மேலும் இது ஒரு காலத்தில் அருகிலுள்ள கடற்கரையின் பெரும்பகுதியையும், அண்டை தீவுகள் பலவற்றையும் கைப்பற்றியதாகத் தெரிகிறது. ஐட்ரா எர்மியோனியர்களுக்கு சொந்தமானது என்றும், அவர்கள் அந்த தீவை சாமியான் கடற்கொள்ளையர்களிடம் ஒப்படைத்ததாகவும், அவர்கள் அதை டிரோசெனியர்களின் பொறுப்பில் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. கிரேக்க பாரசீகப் போர்களின் போது எர்மியோனியர்கள் டிரையோப்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்: அவர்கள் மூன்று கப்பல்களை சலாமிஸ் போருக்கும், 300 பேரை பிளாட்டியா போருக்கும் அனுப்பினர். தொல்லியல் ஆய்வுகிரேக்க மற்றும் ஸ்வீடிஷ் தொல்லியல் ஆய்வாளர்கள் 2015 ஆம் ஆண்டு முதல் ஹெர்மியோனில் ஆய்வு மேற்கொண்டனர். முதலில் A Greek cityscape and its people என்ற தலைப்பிலான ஒரு திட்டமாக அது மேற்கொள்ளப்பட்டது. பண்டைய ஹெர்மியோன் (2015-2017) பற்றிய ஒரு ஆய்வாக, இது ஹெர்மியோன்: எ மாடல் சிட்டி (2018-) என்ற ஆராய்ச்சி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. கட்டமைக்கப்பட்ட சூழல், நிலப்பரப்பு, குடும்பம் மற்றும் பிற சமூகக் கட்டமைப்புகள் மற்றும் இறுதி சடங்குகள் உட்பட சமயப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஆய்வுகள் மூலம் நீண்டகாலக் கண்ணோட்டத்தில் கிரேக்க அரசியலில் வாழ்க்கையைப் பற்றிய சிறந்த புரிதலை உருவாக்குவதே இந்தத் திட்டங்களின் நோக்கமாகும். ஆராய்ச்சிகளின் முடிவுகள் ஏதென்ஸில் உள்ள ஸ்வீடிஷ் இன்ஸ்டிடியூட் இதழில் வெளியிடப்பட்டன இது ஓபஸ்குலா , [3] [4] [5] [6] [7] [8] மற்றும் தொல்பொருள் ஆய்வு இதழில் வெளியிடப்பட்டது. [9] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia