எலியாவின் சீனோ
எலியாவின் சீனோ (Zeno of Elea, கிரேக்க மொழி: Ζήνων ὁ Ἐλεάτης; அண். கிமு 490 – அண். கிமு 430) ஒரு சாக்ரட்டீசுக்கு முந்தையக் கிரேக்க மெய்யியலாளர். இவர் மேக்னா கிரேசியாவைச் சேர்ந்தவர். இவர் பர்மெனிடெசு நிறுவிய எலியாதிக்கப் பள்ளியைச் சார்ந்தவர். அரிசுட்டாட்டில் இவரை இணைமுரணியலைக் கண்டறிந்தவராகக் குறிப்பிடுகிறார்.[1] இவர் தனது சீனோ முரண்புதிர்களுக்காகப் பெயர்பெற்றவர். இவற்றை பெர்ட்ரண்டு ரசல் "அளவற்ற நுட்பமும் திட்பமும் வாய்ந்தன"வாகக் கூறுகிறார்".[2] வாழ்க்கைசீனோவின் வாழ்க்கையைப் பற்றிய தகவல் ஏதும் கொஞ்சமும் கூட கிடைக்கவில்லை. சீனோவின் இறப்புக்குப் பின் ஒரு நூற்றாண்டு கழித்து பிளாட்டோ எழுதிய பர்மெனிடெசு நூல்மட்டுமே முதன்மையான தகவல் வாயிலாகும்.[3] மேலும் அரிசுட்டாட்டிலின் இயற்பியல் நுலிலும் இவர் குறிப்பிடப்படுகிறார்.[4] பர்மெனிடெசின் உரையாடலில் பர்மெனிடெசும் சீனோவும் ஏதென்சுக்கு வருகை தந்ததைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அப்போது பர்மெனிடெசுக்கு அகவை 65. சீனொவுக்கு அகவை 40. சாக்ரட்டீசு அப்போது மிகவும் இளைஞராக இருந்துள்ளார்.[5] சாக்ரட்டீசின் அகவையை 20 ஆகக் கொண்டால், சாக்ரட்டீசு பிறந்தது கி.மு469இல் எனவும் கொண்டால் சீனோவின் பிறப்பு கி.மு 490 ஆகிறது. "சீனோ உயரமாகவும் அழகாகவும் இளமையாக இருந்த்தாகவும் பர்மெனிடெசால் மிக விரும்பப்பட்டவராகவும்" பிளாட்டோ கூறுகிறார்."[5] நூல்கள்சீனோவின் எழுத்துகளைப் பற்றி பல பண்டைய எழுத்தாளர்கள் மேற்கோள் கடினாலும் அவரது நூல்கள் ஏதும் முழுமையாகக் கிடைக்கவில்லை. சீனோவும் பர்மெனிடெசுவும் ஏதென்சுக்கு முதல் தடவை வந்தபோது சீனோவின் நூல்களைக் கொண்டுவந்த்தாகப் பிளாட்டோ கூறுகிறார்.[5] சீனொ பிளாட்டோவிடம் "இவை பர்மெனிடெசுவின் வாதங்களைக் காப்பாற்றவே" எனக் கூறியுள்ளார்.[5] இவை சீனோவின் இளமையில் எழுதப்பட்டன. இவரது ஒப்புதல் இன்றியே திருடி வெளியிடப்பட்டுள்ளன. சீனோவின் நூலில் இருந்து "முதல் வாதத்துக்கான முதல் ஆய்கோளைச்" சாக்ரட்டீசு பின்வருமாறு கூறியதைப் பிளாட்டொ கேட்டுள்ளார்: "இது பலவானால், இதில் ஒத்தனவும் ஒவ்வாதனவும் கலந்திருக்க வேண்டும். எனவே இது நிலவ இயலாதது எனலாம் ஏனெனில், ஒத்தது ஒவ்வாததாகவோ, ஒவ்வாதது ஒத்ததாகவோ இருக்க வாய்ப்பில்லை."[5] பிளாட்டோவின் பர்மெனிடெசு பற்றிய உரையில், புரோக்கிளசு, "முரண்பாடுகள் உள்ள நாற்பது வாதங்களை" சீனோ உருவாக்கியதாகக் கூறுகிறார்.[6] ஆனால் இப்போது ஒன்பது மட்டுமே அறியப்பட்டுள்ளன. சீனோவின் முரண்புதிர்கள்இரண்டாயிரம் ஆண்டுகளாக சீனோவின் முரண்புதிர்கள் மெய்யியலாளர்களையும் கணிதவியலாளர்களையும் இயற்பியலாளர்களையும் குழப்பி, அறைகூவி, ஆர்வமூட்டி, மிரட்டி, தாக்கம் செலுத்தி மகிழ்ச்சியுட்டி வந்துள்ளன. இவற்றில் மிகவும் பெயர்பெற்றவை அரிசுட்டாட்டிலின் இயற்பியலை எதிர்த்தனவாகும்.[7]
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia