எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் (LG Electronics, கொரிய மொழி: LG전자) தென் கொரியாவில் உள்ள சியோல் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு மின்னணு நிறுவனம். இது உலகம் முழுவதிலும் 119 துணை நிறுவனங்களையும் 82,000 தொழிலாளர்களையும் கொண்ட எல்ஜி குழுமத்தின் ஒரு பகுதி. 2011ம் ஆண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள் தயாரிப்பில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக இந்நிறுவனம் இருந்தது.[1] இந்நிறுவனம் 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் தற்போது நான்கு வணிக அலகுகளைக் கொண்டு இயங்குகிறது. இவை வீட்டுப் பொழுதுபோக்கு (Home Entertainment), நகர் தொலைத்தொடர்பு (Mobile Communications), வீட்டுக் கருவிகளும் வளித் தீர்வுகளும் (Home Appliances & Air Solutions), தானுந்துக் கூறுகள் (Vehicle Components) என்பவை ஆகும். எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செனித் நிறுவனத்தின் உரிமையாளராக இருப்பதுடன் எல்ஜி டிஸ்பிளே () நிறுவனத்தின் 37.9 வீதப் பங்குகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia