எல்லி அவரம்
எல்லி அவரம் என்ற பெயரில் பணிப்புரியும் எலிசபெத் அவரமிது க்ரானிலுன்ட் (பிறப்பு 29 ஜூலை 1989)[2][3] ஓர் சுவீடன் கிரேக்க நடிகை.[4] அவர் தற்பொழுது இந்தியாவில் உள்ள மும்பை நகரில் வசித்து வருகிறார். "மிக்கி வைரஸ்" எனப்படும் இந்தி படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர்.[5] மேலும், பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.[6] ஆரம்பகால வாழ்க்கைஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டோக்ஹோல்ம் நகரில், ஜன்னிஸ் அவரமிடிஸ் எனும் கிரேக்க இசையமைப்பாளருக்கு, மரியா க்ரானிலுந்து எனும் நடிகைக்கும் பிறந்தவரே எல்லி அவரம். அவருக்கு கொன்ஸ்டான்டின் அவரமிடிஸ் எனும் சகோதரர் உள்ளார். தொழில் வாழ்க்கைதனது பதினேழாம் வயதில், சுண்டிபெர்க் எனும் இடத்தில் "பரதேசி நடன குழுமம்" ஒன்றினில் உறுப்பினர் ஆனார் அவரம். மேலும், ஸ்காண்டிநேவியா முழுதும் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடினார்.[7] 2010-ஆம் ஆண்டு மிஸ் கிரீஸ் அழகி போட்டியில் பங்கேற்றார்.[8] 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மும்பை நகருக்கு புலம்பெயர்ந்தார் அவரம்.[9] எவெரெடி பாட்டெரிஸ் நிறுவனத்தின் தொலைக்காட்சி விளம்பரத்தில் முதலில் தோன்றினார்.[10] சவுரப் வர்மா இயக்கத்தில் வெளிவந்த மிக்கி வைரஸ் எனப்படும் நகைச்சுவை திரில்லர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.[4][11] இப்படத்தில் அறிமுகமாகும் முன்னரே, ஹிந்தி உச்சரிப்பில் பயிற்சி மேற்கொண்டிருந்தார்.[12] இப்படத்தில் கமாயினி ஜார்ஜ் எனும் வேடத்தில் நடித்திருந்தார்.[13] 2013-ஆம் ஆண்டு பிக் பாஸ் 7 எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், பத்து வாரங்கள் தாக்குப்பிடித்து எழுபதாம் நாளில் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். 2015-ஆம் ஆண்டு வெளிவந்த "கிஸ் கிசுகோ பியார் கரூன்" எனும் படத்தில் நகைச்சுவை நடிகர் கபில் ஷர்மாவுடன் தீபிகா எனும் வேடத்தில் ஜோடி சேர்ந்தார். திரைப்படங்கள்
தொலைக்காட்சியில்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia