எல்லைச்சாமி
எல்லைச்சாமி (ellaichamy) என்பது 1992 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இதனை கே. ரங்கராஜ் தயாரித்து , இயக்கியிருந்தார்.. இத்திரைப்படத்தில் சரத்குமார். ரூபினி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் நாசர், வெற்றி விக்னேஷ்வர், கௌரி ஆகியோரும் நடித்திருந்தனர். எஸ். ஏ. ராஜ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கதைச்சுருக்கம்மைனர் முத்துராசு (நாசர்) கிராமத்துப் பெண்களிடம் தவறுதலாக நடந்து கொள்ளும் பெரும் செல்வந்தர் ஆவார். அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் எல்லைச்சாமி (ஆர். சரத்குமார்) ஒரு துணிச்சலான கிராமத் தலைவர், அவர் கிராமத்தை நன்கு கவனித்து வருகிறார். எல்லைச்சாமியின் சகோதரி (கௌரி) மற்றும் கிராமத்தின் மருத்துவர் (வெற்றி விக்னேஷ்வர்) ஆகியோர் இருவரும் காதலிக்கிறார்கள். ஒரு நாள், காவேரி (ரூபினி) தன்னிடம் தவறுதலாக நடந்து கொண்ட ஒருவரை கண்டுபிடிக்க எல்லைச்சாமியின் கிராமத்திற்கு வருகிறாள், ஆனால் அவர் குற்றவாளியின் முகத்தை பார்க்கவில்லை எனத் தெரிவிக்கிறார். குற்றவாளியை பிடிக்கும் வரை எல்லைச்சாமி எந்த விழாவையும் நடத்தப் போவதில்லையென காவேரியிடம் உறுதியளிக்கிறார். இதற்கிடையில், எல்லைச்சாமியின் சகோதரி கர்ப்பமாகிறாள். அவரது திருமணத்தை சீக்கிரம் முடிக்க வேண்டி எல்லைச்சாமி கவலை கொள்கிறார். பின்னர், தான்தான் அவளிடம் தவறுதலாக நடந்து கொண்டதாக ஒரு பொய் கூறி காவேரியை திருமணம் செய்துகொள்கிறார். அவரது சகோதரியும் அதே நேரத்தில் தன் காதலனை மணக்கிறார். இவ்வாறு பொய் கூறி திருமணம் செய்ததால் எல்லைச்சாமிக்கு பதிலாக கிராம மக்கள் ஒரு புதிய கிராமத் தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர். இப்போது, காவேரி யாரோ தன்னிடம் தவறுதலாக நடந்து கொண்டதாக பொய் கூறியதாக எல்லைச்சாமியிடம் கூறுகிறாள். காவேரி மைனர் முத்துராசுவின் உறவினர் என்பதும், முத்துராசு அவளை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதனால் அவள் மறுத்துவிட்டு எல்லைச்சாமியின் கிராமத்திற்கு ஓடிவரும் வழியில், அவரது சகோதரி காவேரியை சந்திக்க , அவர்தான் இந்த யோசனையை அவளிடம் தெரிவித்ததாகவும் எல்லைச்சாமிக்கு பிறகு தெரிய வருகிறது. நடிகர்கள்
ஒலித்தொகுப்பு
இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார். 1992இல் இதன் பாடல் வெளியிடப்பட்டது, 6 பாடல்களை புலமைப்பித்தன் மற்றும் எஸ். ஏ. ராஜ்குமார் எழுதியுள்ளனர்[1][2]
ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia