எல். ஐ. சி. நரசிம்மன்
எல். ஐ. சி. நரசிம்மன் (L. I. C. Narasimhan, இறப்பு: அக்டோபர் 27, 2011, அகவை 71) தமிழகத் திரைப்பட நடிகர். எல்.ஐ.சியில் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் திரைப்பட, நாடக ஆசையால் விருப்ப ஓய்வு பெற்று நடிக்க வந்தார். நாடகத்துறையில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்த நரசிம்மன் ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். எஸ். பி. முத்துராமன் இயக்கிய படங்கள் அனைத்திலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி நாடகத் தொடர்களிலும் நரசிம்மன் நடித்து வந்தார். மறைவுநரசிம்மன் சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு 2011 அக்டோபர் 27 இரவு 11:30 அளவில் சென்னையில் காலமானார். சின்மயா நகர் நெற்குன்றத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த இவரின் மனைவி பெயர் நளினி. சுரேஷ் என்ற மகனும் ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர். நடித்த சில படங்கள்
மேற்கோள்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia