எல் கிரேக்கோ
எல் கிரேக்கோ என அழைக்கப்பட்ட டொமினிகோஸ் தியோடோகோபாலஸ் (1541-7 April 1614) என்பவர் எசுப்பானிய மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்த ஓவியர், சிற்பி மற்றும் கட்டிட ஆவார். தனது படைப்புகளில் முழு கிரேக்க பெயரின் கையொப்பம் இட்டதால், இவரை எல் கிரேக்கோ என அழைத்தனர். கிரெட்டே எனும் இடத்தில் பிறந்தார் எல் கிரேக்கோ. கிரெட்டே அப்பொழுது வெனீஸ் அரசாட்சியில் இருந்தது மற்றும் பய்சான்டைன் யுகத்திற்கு பிந்தைய காலத்தின் கலை மையமாக திகழ்ந்தது. அந்த கலையில் கற்று தெரிந்தபின், தனது 26வது வயதில் வெனீஸ் நகரிற்கு பயணப்பட்டார் எல் கிரேக்கோ.[2] 1570ஆம் ஆண்டில் ரோம் நகரிற்கு சென்ற இவர், அங்கே ஓர் பயிலரங்கு திறந்து பல படைப்புகளை செய்து முடித்தார். 1577ஆம் ஆண்டில் எசுப்பானிய நாட்டில் உள்ள டோலெடோ எனும் இடத்திற்கு புலம்பெயர்ந்த எல் கிரேக்கோ, இறக்கும் வரை அங்கேயே இருந்து பல படைப்புகளை செய்தார். டோலெடோ நகரில் தான் இவருக்கு பெரும் வாய்ப்புகள் கிட்டின மற்றும் தனது புகழ்பெற்ற ஓவியங்களை வரைந்தார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்எல் கிரேக்கோ பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:
|
Portal di Ensiklopedia Dunia