எழுந்திரு! விழித்திரு!

எழுந்திரு! விழித்திரு!
நூலாசிரியர்சுவாமி விவேகானந்தர்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைதொகுப்பு நூல்
வெளியீட்டாளர்சென்னை இராமகிருஷ்ணர் மடம்
பக்கங்கள்11 பகுதிகள்
ISBN9788178233482

எழுந்திரு! விழித்திரு!என்பது சுவாமி விவேகானந்தர் தெரிவித்த கருத்துகள் சேர்க்கப்பட்டு தொகுப்பாக தமிழில் வெளியான நூல்கள்[1]. இத் தொகுப்பு முதலில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டான 1963 இல் ’ஞானதீபம்’ என்ற பெயரில் பத்து சுடர்களாக (பகுதிகளாக) வெளிவந்தது. 25 வருடங்களுக்குப் பின்னர் அதே தொகுப்பு பதினாறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 1987 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பின்னர் 1997 இல், சுவாமி விவேகானந்தரைப் பற்றி இந்தியாவிலும் அமெரிக்காவிலும் நடைபெற்ற ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கடிதங்கள், சொற்பொழிவுகள், பத்திரிக்கைக் குறிப்புகள் சேர்க்கப்பட்டு, ஞானதீபத்தின் புதிய பதிப்பு பதினோரு சுடர்களாக வெளிவந்தது. ’ஞானதீபம்’ என்ற தலைப்பு "எழுந்திரு! விழித்திரு!" என்று மாற்றப்பட்டு 2006 ஆம் ஆண்டு புதிய பதிப்பாக வெளிவந்தது. [2]

பகுதிகள்

  • எழுந்திரு! விழித்திரு! பகுதி 1
சிகாகோ சொற்பொழிவுகள், கர்மயோகம், பக்தியோகம்
  • எழுந்திரு! விழித்திரு! பகுதி 2
ராஜயோகம், அருளுரை
  • எழுந்திரு! விழித்திரு! பகுதி 3
ஞானயோகம்
  • எழுந்திரு! விழித்திரு! பகுதி 4
வேதாந்தம், மதம்
  • எழுந்திரு! விழித்திரு! பகுதி 5
கொழும்பு முதல் அல்மோரா வரை
  • எழுந்திரு! விழித்திரு! பகுதி 6
உரையாடல்கள், பேட்டிகள்
  • எழுந்திரு! விழித்திரு! பகுதி 7
உலக மதங்கrள், மத ஒப்புமை, ஸ்ரீராமகிருஷ்ணர்
  • எழுந்திரு! விழித்திரு! பகுதி 8
இந்தியா, இந்தியப் பெண்கள், ஒப்புமை
  • எழுந்திரு! விழித்திரு! பகுதி 9
கவிதைகள், கடிதங்கள்
  • எழுந்திரு! விழித்திரு! பகுதி 10
துணுக்குகள், கடிதங்கள்
  • எழுந்திரு! விழித்திரு! பகுதி 11
கடிதங்கள், பத்திரிக்கைக் குறிப்புகள்

[3]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-16. Retrieved 2014-08-04.
  2. 'எழுந்திரு! விழித்திரு!'; பகுதி 1; பதிப்புரை
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-21. Retrieved 2014-08-04.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya