எஸ்கிசெஹிர் மாகாணம்
எஸ்கிசெஹிர் மாகாணம் (Eskişehir Province, துருக்கியம்: Eskişehir ili ) என்பது வடமேற்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும் . இதன் அருகிலுள்ள மாகாணங்கள் வடமேற்கில் பிலெசிக், மேற்கில் கெட்டஹ்யா, தென்மேற்கில் அபியோன்கராஹிசர், தெற்கே கொன்யா, கிழக்கில் அங்காரா, வ்டக்கே போலு ஆகியவை ஆகும். மாகாண தலைநகராக எஸ்கிசெஹிர் உள்ளது. மாகாணத்தின் பெரும்பகுதி மத்திய அனடோலியா பிராந்தியத்தில் அமைந்துள்ளது. எஸ்கிசெஹிர் மாகாணமானது பழமையானதும், கலாச்சார ரீதியாக வளர்ந்த ஒரு துருக்கி மாகாணமாகும். இதன் மக்கள் தொகை 844,842 ஆகும். இதன் நகர்ப்புற மக்கள் தொகை 734,837. எஸ்கிஹெஹிர் இரு பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ளது, எஸ்கிசெஹிர் ஒஸ்மங்காசி பல்கலைக்கழகம், மற்றும் அனடோலு பல்கலைக்கழகம், இது துருக்கியின் மிகப்பெரிய பல்கலைக்கழகமாகும், இது ஐரோப்பாவில் சில கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ளது. மாவட்டங்கள்![]() எஸ்கிசெஹிர் மாகாணம் 14 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவற்றில் இரண்டு மாவட்டங்கள் எஸ்கிசெஹிரின் பெரு நகராட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன (தலைநகர மாவட்டமானது தடித்த எழுத்துகளில் காட்டப்பட்டுள்ளது).
புள்ளிவிவரங்கள்எஸ்கிசெஹிரின் மக்கள் தொகையில் 99% என உயர்ந்த அளவு எழுத்தறிவைக் கொண்டுள்ளனர். பல பல்கலைக்கழகங்கள் மற்றும் இராணுவ கல்வி நிறுவனங்கள் நகரத்திலும் அதைச் சுற்றியும் அமைந்துள்ளன. துருக்கிய தொழில்நுட்ப மாணவர்கள் எஸ்கிசெஹிர் பல்கலைக்கழகங்களில் குவிந்துள்ளனர். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு உதுமானியப் பேரரசின் நிறுவனர்களின் சந்ததியினர் முதன்மையாக குடியேறியப் பகுதியாக எஸ்கிசெஹிர் மற்றும் அண்டை நகரங்கள் இருந்தன. மாகாணத்தில் உள்ள பல கிராமங்கள் அந்தக் காலத்திலிருந்து துருக்கிய பழங்குடியினர் / குலங்களின் பெயர்களைக் கொண்டுள்ளன. எஸ்கிசெஹிர் நகரில் உள்ள சிலர் தங்கள் குடும்ப தோற்றத்தை கிரிமியா மற்றும் காகசஸ் வரை கொண்டுள்ளதைக் காணலாம் .
மீரிசம்எஸ்கிசெஹிர் மாகாணத்தில் கிடைக்கும் மீரிசம் மூலமாக இந்த மாகாணம் சர்வதேச அளவில் அறியப்படுகிறது, இது ஒரு வெள்ளை நுரை கல், இது செதுக்கு வேலைகளுடன் புகைபிடிக்கும் குழாய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது துருக்கியில் lületaşı என்று அழைக்கப்படுகிறது. குறிப்புகள் |
Portal di Ensiklopedia Dunia