எஸ். ஆர். ஜான்கித்

எஸ் ஆர் ஜான்கித்

எஸ். ஆர். ஜான்கித் ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் முன்னாள் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் ஆவார். புகழ்பெற்ற பவாரியா நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி, பல கொலை மற்றும் கொள்ளைகள் செய்த ஓமா பவாரியா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கும் தண்டனைப் பெற்று தந்தவர் இவர். இவ்வழக்கில் இவரது முயற்சிகளுக்கு, ஜனாதிபதியால் இவர்க்கு காவல்துறையினருக்கான சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது.[1][2][3][3][4][5][6]

ஆரம்ப வாழ்க்கை

எஸ்.ஆர்.ஜான்கித், ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மேர் மாவட்டத்தில், பாந்த்ரா கிராமத்தில் 01.08.1959 அன்று பிறந்தார். இவர் தனது பள்ளிப் படிப்பை கவாஸ் எனும் ஊரில் உள்ள பள்ளியில் முடித்தார். பின்பு ஜெய்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டம் பெற்றார்.

திரைப்படம்

கார்த்தியின் படமான தீரன் அதிகாரம் ஒன்று ஜாங்கித்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தில் கார்த்தி ஜான்கித்தின் கதாப்பாத்திரத்தை தீரன் என்ற பெயரில் நடித்திருந்தார்.[7]

குறிப்பு

  1. "President's police medal for S.R. Jangid". 15 August 2008.
  2. "President's police medal for S.R. Jangid". 15 August 2008.
  3. 3.0 3.1 "Ex-DGP Jangid awarded doctorate". The Times of India. 2023-12-01. https://timesofindia.indiatimes.com/city/chennai/ex-dgp-jangid-awarded-doctorate-by-university-of-madras/articleshow/105641402.cms. 
  4. Correspondent, Special (2019-07-30). "DGP Jangid to retire today" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/dgp-jangid-to-retire-today/article28764398.ece. 
  5. "एक जोड़ी जूती के सहारे गैंग का पर्दाफाश करने वाले रिटायर्ड आईपीएस पर बनेगी फिल्म - Film is being made on the story of retired IPS officer Sangaram Jangid". Jagran (in இந்தி). Retrieved 2023-12-31.
  6. Navaneethakrishnan, Stalin. "S R Jangid IPS: 'எச்.வினோத் கேட்ட கதை…' மேடையில் உடைத்த ஓய்வு டிஜிபி ஜாங்கிட் !". Tamil Hindustan Times. Retrieved 2023-12-31.
  7. "Deccan Chronicle". Deccan Chronicle. https://www.deccanchronicle.com/entertainment/kollywood/181117/real-life-theeran-talks-about-the-film.html. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya