எஸ். எஸ் மியூசிக்

எஸ். எஸ் மியூசிக்
ஒளிபரப்பு தொடக்கம் 1 ஆகத்து 2001
வலைத்தளம் தொலைக்காட்சி இணையதளம்

எஸ். எஸ். மியூசிக் (SS Music) அல்லது சதர்ன் ஸ்பைஸ் மியூசிக் (Southern Spice Music) தொலைக்காட்சி அலைவரிசை சென்னையை தளமாகக் கொண்டியங்கும் ஓர் இசைச்சேவை வழங்கும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியாகும். இது பல்மொழி ஆங்கில ஊடக அலைவரிசையாக மேற்கத்திய பரப்பிசை மற்றும் தென்னிந்திய மொழித் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பி வருகிறது. சில நேரங்களில் இந்தி திரைப்படப் பாடல்களும் ஒலிபரப்பாகின்றன.

இந்த அலைவரிசையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக விளங்கிய பலர் இந்தியத் திரைப்படத்துறைக்கு சென்று வெற்றி அடைந்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் கிரைக் வழங்கும் ரீச் அவுட் என்ற நிகழ்ச்சியும் பரவலாக விரும்பப் பட்டது. தனது "சிஸ்லிங் ஹிட்ஸ்" என்ற நிகழ்ச்சியில் 2010ஆம் ஆண்டு 25 மார்ச்சு மற்றும் ஏப்ரல் 10 நாட்களில் ஆபாசமாகக் காட்டியதாக இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அவ்வாண்டு நவம்பர் 22 நள்ளிரவு முதல் ஒரு வார காலத்திற்கு நவம்பர் 29 வரை தடை செய்தது. [1]

மேற்கோள்கள்

  1. "பிரிமியூசு இசைக்கான இணைய இதழில்". Archived from the original on 2010-11-23. Retrieved 2011-06-10.

வெளியிணைப்புகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya