எஸ். கே. பி. பொறியியல் கல்லூரி
எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி (SKP Engineering College) என்பது தமிழ்நாட்டின், திருவண்ணாமலை, சின்னகாங்கியனூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஆகும். திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றிவாழும் கிராமப்புற மக்களுக்கு தொழில்நுட்ப கல்வி வழங்கும் நோக்குடன் 1999 ஆம் ஆண்டு இக்கல்லூரி நிறுவப்பட்டது. [1] [2] எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியானது ஒரு சுய நிதிக் கல்லூரி ஆகும். இது ஸ்ரீ எஸ். குப்புசாமி நினைவு கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது . இந்த கல்லூரிக்கு புது தில்லியின் ஏ.ஐ.சி.டி.இ ஒப்புதல் அளித்துள்ளது. இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி முதலில் 240 மாணவர்களுடன் பி.இ / பி.டெக் படிப்புகளை வழங்கத் தொடங்கியது. இப்போது ஏழு பி.இ / பி.டெக் பாடங்கள் மற்றும் ஏழு முதுநிலை படிப்புகளும் வழங்கிவருகிறது. இக்கல்லூரியானது ஆண்டுக்கு 810 மாணவர் சேர்க்கைகான அங்கீகரிகாரம் பெற்றுள்ளது. [3] படிப்புகள்எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியானது மாணவர்களுக்கு பல்வேறு பொறியியல் படிப்புகளை கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. இங்கு வழங்கப்படும் படிப்புகள் பின்வருமாறு:
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia