சொண்டெகொப்பா எஸ். சிறீகண்ட சாத்திரி (S. Srikanta Sastri; பிறப்பு: 1904 நவம்பர் 5 - இறப்பு: 1974 மே 10) இவர் ஓர் இந்திய வரலாற்றாசிரியரும், இந்தியவியலாரும், பன்மொழிப் புலவரும் ஆவார்.[8][9] இவர் சுமார் 12 புத்தகங்கள், இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், பல தனிக்கட்டுரைகளையும், புத்தக மதிப்புரைகளையும் நான்கு தசாப்தங்களாக ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு,சமசுகிருதம் போன்ற மொழிகளில் எழுதியுள்ளார்.[10] "கர்நாடக வரலாற்றின் ஆதாரங்கள்", "இந்தியாவின் புவிசார் அரசியல் மற்றும் மாபெரும் இந்தியா", [11] "பாரதிய சம்சுகிருதி" (இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பற்றிய ஒரு தொகுப்பு) [12] மற்றும் "போசலா வாஸ்துஷில்பா" ( கர்நாடகாவில்போசளர் காலத்தின் கோயில் கட்டிடக்கலை பற்றிய ஆய்வு). [13] எஸ். சிறீகாந்த சாத்திரி கிரேக்கம், லத்தீன், பாளி, பிராகிருதம், சமசுகிருதம் மற்றும் ஜெர்மன் உள்ளிட்ட பலவகையான பதினான்கு மொழிகளை பழகியிருக்கிறார் . [14][15][16] இவர் 1940 - 1960க்கும் இடையில் மைசூர் பல்கலைக்கழகத்தின் மகாராஜா கல்லூரியில் வரலாறு மற்றும் இந்தியவியல் துறையின் தலைவராகவும் இருந்தார். [17] 1970ஆம் ஆண்டில் இவருக்கு கன்னட இலக்கிய அகாதமி விருது வழங்கப்பட்டது . பின்னர் 1973இல் புராண சமுதாய வைர விழாவின் போது கர்நாடக ஆளுநர் மோகன் லால் சுகாதியா கௌரவித்தார். [18] இவ்விழாவில் புகழ்பெற்ற அறிஞர்களால் வரலாறு மற்றும் இந்தியவியல் பற்றிய கட்டுரைகளுடன் 1973ஆம் ஆண்டில் "சிறீகண்டிகா" என்ற தலைப்பில் கட்டுரைகள் நிறைந்த நினைவு தொகுதி இவருக்கு வழங்கப்பட்டது. [19][20]சிந்துவெளி நாகரிகம் மற்றும் அரப்பா மற்றும் மொகெஞ்சதாரோவில் நகர திட்டமிடல் குறித்த இவரது படைப்புகள் அடுத்தடுத்த கட்டுரைகளில் வெளியிடப்பட்டு கணிசமான கவனத்தை ஈர்த்தன. [21] ஆரிய படையெடுப்புக் கோட்பாடு, [4][22] ஆதி சங்கராச்சாரியாரின் தேதி, [23] இந்திய கலாச்சாரம் குறித்த ஆசுவால்டு ஸ்பெங்கிரின் பார்வை, [24]சமண அறிவின் தத்துவக் கோட்பாடு, [25] சிந்து சமவெளி நாகரிகத்தின் புரோட்டோ-வேத மதம் மற்றும் இருதலைப்புள் பறவையின் பரிணாம [26][27] அடையாளங்கள் இன்றும் பொருத்தமானவை. [28]
வம்சாவளி
எஸ். சிறீகண்ட சாத்திரி ஒரு அறிவார்ந்த பரம்பரையில் பிறந்தார். ஒரு தந்தைவழி மூதாதையர் - யக்ஞபதி பட்டா கெம்பெ கவுடாவின் சபையில் பிரபல அரசவைக் கவிஞராக இருந்தார். விஜயநகர இராச்சியத்தின் புகழ்பெற்ற அரசவைக் கவிஞரான தாய்வழி மூதாதையர் உமாமகேசுவர சாத்திரி, "பாகவத சம்பு" என்ற படைப்புக்காக "அபிநவ காளிதாசர்" என்ற பட்டத்தை பெற்றவர். [29] இவரது மாமாக்கள் - வித்வான் மோட்டகனகள்ளி மகாதேவ சாத்திரி, [30] வித்வான் சங்கர சாத்திரி மற்றும் ஆஸ்தான மகா வித்வான் ராமசேச சாத்திரி ஆகியோர் மைசூர் அரண்மனையில் சிறந்த அரசவைக் கவிஞர்களாக இருந்தனர். வித்வான் ராமசேச சாத்திரி பாகவதத்தைசமசுகிருதத்திலிருந்துகன்னடத்தில் மொழிபெயர்த்த முதல் நபராவார். [31]
மகாராஜாவின் கல்லூரி குழு புகைப்படம் குவெம்பு, தா ரா சு, ஏ. ஆர். கிருஷ்ண சாத்திரி, ராலப்பள்ளி அனந்தா கிருஷ்ணா சர்மா போன்றவர்களைக் காட்டும் புகைப்படம்
ஆரம்ப கால வாழ்க்கை
மைசூர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் குழு புகைப்படம் எஸ். எஸ். சிறீகண்ட சாத்திரி தனது ஆசிரியர் பேராசிரியர் எஸ். வி. வெங்கடேசுவரருடன் (நடுவில் அமர்ந்திருப்பவர்)
எஸ். சிறீகண்ட சாத்திரி 1904 ஆம் ஆண்டில் மைசூரின்நஞ்சன்கூடு, என்ற இடத்தில் சேசம்மா மற்றும் பிராமணர்களின்தெலுங்கு முலகநாடு சமூகத்தைச் சேர்ந்த இராமசாமி சாத்திரி ஆகியோரின் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். [32] மைசூர் செல்வதற்கு முன்பு கோலார், நஞ்சஞ்கூடு மற்றும் சிக்கபள்ளாப்பூர் போன்ற நகரங்களில் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பைப் பெற்றார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் , மைசூர் மகாராஜாவின் கல்லூரியில் தனது இளங்கலை மற்றும் பின்னர் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். இங்கே இவர் எஸ். வி. வெங்கடேசுவரன் (வரலாறு), ஜே. சி. ரோலோ, பி. எம். சிறீகண்டையா (ஆங்கிலம்), வி. எல். திசௌசா, எச். கிருஷ்ணா ராவ் (கிரேக்க வரலாறு), என். எஸ். சுப்பா ராவ் (பொருளாதாரம்) மற்றும் எம். எச். கிருஷ்ணா (பழங்கால வரலாறு) போன்றவர்களிடம் பயின்றார். [33] 1926 சூலையில் ஐக்கிய இராச்சியம் & அயர்லாந்தில் வெளிவரும் ஆசிய சமூகத்தின் பத்திரிக்கையில் பேரரசர் ஹர்ஷவர்தன சிலாதித்யாவின் ஆட்சியில் "தெற்கில் சிலாதித்யாவின் வெற்றிகள்" என்ற தலைப்பில் தனது முதல் கட்டுரையை எழுதினார். [34] சாத்திரி தனது கல்வியை முடிந்ததும், மைசூர் பல்கலைக்கழகத்தின் மகாராஜா கல்லூரியில் வரலாற்றுத் துறையில் (1930) ஆசிரியர் பதவியைப் பெற்றார். பின்னர் 1935இல் அத்துறையில் விரிவுரையாளரானார். இந்த காலங்களில் மைசூர் மகாராஜா கல்லூரியில் சமகாலத்தவரான கே. வி. புட்டப்பா (குவெம்பு), ஏ. ஆர். கிருஷ்ண சாஸ்திரி, ஆர். அனந்த கிருஷ்ணர், வி. சீதாராமையா, டி. எல். நரசிம்மச்சார், டி.எஸ்.சாமராவ் மற்றும் என். அனந்தரங்காச்சார் ஆகியோரும் அங்கு பணிபுரிந்து வந்தனர்.
படைப்புகள்
சாத்திரி சுமார் 12 புத்தகங்கள், 224 கட்டுரைகள் [ஆங்கிலத்தில் 100, கன்னடத்தில் 114, தெலுங்கில் 8, சமசுகிருதம் மற்றும் இந்தியில் 1] மற்றும் கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் சமசுகிருத மொழிகளில் மூன்று தனிக்கட்டுரைகள் மற்றும் புத்தக மதிப்புரைகளை எழுதியுள்ளார். இவரது முந்தைய கட்டுரைகளில் "கன்னட நயானந்தா" மற்றும் "சிவகங்கா சேத்ரா" - (மத மையத்தைப் பற்றிய ஒரு கட்டுரை) ஆகியனவும் அடங்கும். இவர் தனது முதல் கட்டுரையை "ஐக்கிய இராச்சியம் & அயர்லாந்தில் வெளிவரும் ஆசிய சமூகத்தின் பத்திரிக்கையில்" தனது இருபத்தி இரண்டு வயதில் வெளியிட்டார். [34] பின்னர் இவர் விஜயநகர இராச்சிய மன்னர் தேவராயரைப் பற்றி "இந்திய பழங்காலம்" என்ற ஒரு சிறிய பகுதியை எழுதினார். இவரது முந்தைய புத்தகம் "கர்நாடக வரலாற்றின் ஆதாரங்கள், முதல் தொகுதி " இரண்டு ஆயிரம் ஆண்டுகளில் கர்நாடக மாநில வரலாற்றைப் பற்றிய விரிவான ஆய்வுக்கு உதவும் கல்வெட்டுகள், வடிவில் வளப் பொருட்களின் பட்டியலை வழங்குகிறது. இவரது அடுத்த படைப்பு - "இந்தியாவின் புவிசார் அரசியல் மற்றும் மாபெரும் இந்தியா" என்பது ஆசியாவில் உருவாகி வரும் புவி-அரசியல் காட்சியில் மற்றும் வரவிருக்கும் தசாப்தங்களில் இந்தியாவின் பங்கைப் பற்றியது. இவரது மூன்றாவது புத்தகம் - 1952 இல் வெளியிடப்பட்ட "தலக்காட்டின் ஆரம்பகால கங்கர்கள்" தெற்கு கர்நாடகாவில் கங்க வம்சத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைக் கையாண்டது. [35] இவரது நான்காவது புத்தகம் "பாரதிய சம்சுகிருதி" மூன்று ஆயிரம் ஆண்டுகளில் இந்தியாவின் கலாச்சார, பாரம்பரிய மற்றும் வரலாற்று அம்சங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. சாத்திரி சித்ரதுர்காவின்நாயக்க ஆட்சியாளர்களைப் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையான "சித்ரதுர்காவின் தலைநகரம் " (1928) என்ற நூலில் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாளையக்காரர்களின் தோல்வியையும் வீழ்ச்சியையும் விவரிக்கிறது. [36] இவரது ஆங்கில எழுத்துக்களின் தொகுப்பு 2016 இல் "சிறீகாந்தாயனா" என்ற தலைப்பில் இரண்டு பெரிய தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
அங்கீகாரம்
ஆளுநர் மோகன்லால் சுகாதியா எஸ். சிறீகண்ட சாத்திரியை கௌரவிக்கும் புகைப்படம்
1949 இல் மைசூர் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் சான்றிதழ் பட்டம் பெற்ற இரண்டாவது நபராக சாத்திரி இருந்தார். 1958 இல் இவர் கர்நாடகாவின் பெல்லாரி நகரில் நடந்த கன்னட இலக்கிய மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். இவருக்கு 1970இல் கன்னட இலக்கிய அகாதமி விருது வழங்கப்பட்டது. [37] புராண சங்கத்தின் வைர விழா கொண்டாட்டங்களின் போது, கர்நாடக ஆளுநர் மோகன்லால் சுகாதியா வரலாற்று ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளுக்கு வாழ்நாள் பங்களிப்புக்காக கௌரவித்தார். இவ்விழாவில் மைசூர் பல்கலைக்கழகம் புகழ்பெற்ற அறிஞர்களால் வரலாறு மற்றும் இந்தியவியல் பற்றிய கட்டுரைகளுடன் 1973 ஆம் ஆண்டில் "சிறீகண்டிகா" என்ற தலைப்பில் கட்டுரைகள் நிறைந்த நினைவு தொகுதி இவருக்கு வழங்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டில், 1994 இல் தென்னிந்திய நாணயவியல் மாநாடு நடந்த போது பெங்களூரில் உள்ள புராண அமைப்பு சாத்திரியின் உருவப்படம் வெளியிட்டது. 2004 ஆம் ஆண்டில், இவரது பிறந்த நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடத்தப்பட்டது. அங்கு இவரது நினைவாக பல ஆவணங்கள் வெளியிடப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்ட இந்த ஆவணங்களை உள்ளடக்கிய "நூற்றாண்டு நினைவு தொகுதி" பெங்களூரில் உள்ள புராண சங்கம் வெளியிட்டுள்ளது. [38][39] ஐம்பது ஆண்டுகால அரசைக் குறிக்கும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கர்நாடக அரசு 2008இல் "பாரதிய சம்சுகிருதி" இன் மறுபதிப்பைக் கொண்டு வந்தது. டி. வி. வெங்கடச்சால சாத்திரி மற்றும் பி.என். நரசிம்ம மூர்த்தி ஆகியோரின் கீழ் இருந்த புராண சங்கம், சாத்திரியின் படைப்புகளை "சிறீகண்டாயனா" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் கொண்டு வந்தது. [40][41][42]
ஆளுமை
எஸ். சிறீகண்ட சாத்திரி மைசூர் மகாராஜா கல்லூரியில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக (1926 - 1960) வரலாற்றைக் கற்பித்தார். அனைத்திந்திய வானொலியின் மைசூர், பெங்களூர் மற்றும் தர்வாடு வானொலி நிலையங்களில் மாநில வானொலியில் இருபதுக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். இவர் தனது காலத்தின் பிரபலமான செய்தித்தாள்களில் புத்தகங்களை மதிப்பாய்வு செய்தார். [43] இவர் பல்வேறு புத்தகங்களுக்கு பல முன்னுரைகள் மற்றும் அறிமுகங்களையும் எழுதினார். [44][45] மைசூர் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையின் நிறுவனப் பேராசிரியராக, பாடநெறிப் பொருளை வளர்ப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். [46][47] இவரது மாணவர்களில் ஜி. வெங்கடசுப்பையா, உ. இரா. அனந்தமூர்த்தி, எம். சித்தானந்த மூர்த்தி, டி. வி. வெங்கடச்சால சாத்திரி, எஸ். ஆர். ராவ், ஆர். கே. நாராயணன், ஆர். கே. லட்சுமண், எச். வை.சாரதா பிரசாத் மற்றும் ஒய். ஜி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்குவர். [48] இவர் 1974 மே 10 அன்று தனது அறுபத்தொன்பது வயதில் பெங்களூரில் காலமானார். [49]
↑V. S., Sampathkumaracharya (2006). Life in the Hoysala age, 1000–1340 A.D. (First ed.). Mysore: Bharateeya Ithihasa Samkalana Samiti. p. 426. கணினி நூலகம்423293561.
↑Nāgarājayya, Hampa (2010). Rāṣṭrakūṭas : revisited (First ed.). Bangalore: K.S. Muddappa Smaraka Trust Krishnapuradoddi. p. 417. ISBN9788190818353. கணினி நூலகம்712021539.
↑C. U., Manjunath (2012). ಶಾಷನಗಳು ಮತ್ತು ಕರ್ನಾಟಕ ಸಂಸ್ಕೃತಿ [Śāsanagaḷu mattu Karṇāṭaka saṃskr̥ti: A. D. 1150-1340] (First ed.). Kuppam: Chitrakala Prakashana. p. 280. கணினி நூலகம்864790401.
↑Srikantayya, K (1983). ವಿಜಯನಗರ ಕಾಲದ ಕನ್ನಡ ಸಾಹಿತ್ಯದಲ್ಲಿ ಜನಜೀವನ ಚಿತ್ರ (ಸಾಮಾಜಿಕ, ಆರ್ಥಿಕ ಮತ್ತು ರಾಜಕೀಯ) (Second ed.). Mysore: Geetha Book House. p. 508.
↑Krishnamurti, Y. G. (1943). Independent India and a New World Order (First ed.). Lamington Road, Bombay: The Popular Book Depot. p. XVIII. Archived from the original on 9 ஏப்ரல் 2016. Retrieved 28 March 2016.
↑Mahalingam, T. V. (1952). "Review of Early Gangas of Talakad by T. V. Mahalingam". Quarterly Journal of Mythic SocietyXIX (6).
↑Lewis, Barry. "Chitradurga Nayakas". barry-lewis.com. Barry Lewis. Retrieved 26 December 2015.
↑Iyengar, Krishnaswamy. H. S. K. (1974). "H. S. Krishnaswamy Iyengar on S. Srikanta Sastri". www.srikanta-sastri.org.
↑Commemoration Volume, Centenary (2004). "Quarterly Journal of Mythic Society". Quarterly Journal of Mythic SocietyXCV (4).
↑Commemoration Volume, Centenary (2005). "Quarterly Journal of Mythic Society". Quarterly Journal of Mythic SocietyXCVI (3).
↑Sastri, S.Srikanta. "ŚRÌKAŅŢHAYÁNA". News Reportage on Book Launch (ಮುಕ್ತಛoದ).
↑Sastri, S. Srikanta. "ಇತಿಹಾಸ ಸಂಶೋಧನೆಯ ಮೇರು ಶಿಖರ". ಪ್ರಜಾವಾಣಿ.
↑Sastri, S. Srikanta. "ಗುರು ಸ್ಮರಣೆಯಲ್ಲಿ ಶಿಷ್ಯರ 'ಶ್ರೀಕಂಠಯಾನ': ವೆಂಕಟಸುಬ್ಬಯ್ಯ". ಪ್ರಜಾವಾಣಿ.
↑Ranganath, H (2002). "ಹಿರಿಯರ ಒಡನಾಟದಲ್ಲಿ - Walk with Elders".
↑Muni, Kumadendu (2003). "Siribhoovalaya" - Review by S. Srikanta Sastri (1st ed.). Bangalore. p. 466.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
↑Sastry, Venkatachala. T. V. (2014). ಡಾ।। ಎಸ್. ಶ್ರೀಕಂಠಶಾಸ್ತ್ರೀಗಳು: ಕನ್ನಡ ಸಾಹಿತ್ಯ ಸೇವೆ, ಶೋಧನೆ (4th ed.). Bangalore. p. 130.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
↑Veṅkaṭasubbayya, G. V. (2010). ಸಿರಿಗನ್ನಡ ಸಾರಸ್ವತರು - Sirigannaḍa Sārasvataru (1st ed.). Beṅgaḷūru.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
↑Ali, Sheikh. B (1973). Dr S. Srikanta Sastri as a historian. Mysore.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)