எஸ். பாலகிருஷ்ணன் (இசையமைப்பாளர்)
ச. பாலகிருஷ்ணன் (S. Balakrishnan ) (8 நவம்பர் 1948 - 17 ஜனவரி 2019) ஓர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும், இசை இயக்குநரும் ஆவார். இவர் முக்கியமாக மலையாளத் திரையுலகில் பணியாற்றினார். இரட்டை இயக்குனர்கள் சித்திக்-லாலுடனான தொடர்புக்காக மிகவும் பிரபலமான இவர், 1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முற்பகுதியிலும் பல பிரபலமான பாடல்களுக்கு இசையமைத்திருந்தார்.[1][2] சுயசரிதைச. பாலகிருஷ்ணன் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சிட்லஞ்சேரியில் சங்கரையா ஐயர் – ராஜம்மாள் தம்பதியருக்கு பிறந்தார். கோயம்புத்தூரில் பொருளாதார வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்ற பின்னர் சென்னை சென்று திரைப்படங்களில் பணியாற்றத் தொடங்கினார். 1975ஆம் ஆண்டில் இலண்டன் திரினிட்டி கல்லூரி நடத்திய மேற்கத்திய இசைப் போட்டியில் கலந்து கொண்டு சிறந்த மாணவர் விருதைப் பெற்றார்.[3] 1975 ஆம் ஆண்டில் குணா சிங், இராஜன்–நாகேந்திரா ஆகியோரிடம் உதவி இசை இயக்குநராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.[3] இளையராஜா போன்ற பிரபல இசை இயக்குனர்களுக்காக மேற்கத்திய கருவியான ரெக்கார்டரையும், மேற்கத்திய புல்லாங்குழலையும் வாசித்தார். இயக்குநரும் தயாரிப்பாளருமான பாசிலின் ஆலோசனையின் கீழ், 1980களின் பிற்பகுதியில் சித்திக்-லாலின் நகைச்சுவைத் திரைப்படமான ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் (1989) என்ற படத்தில் இவரது திரையிசை வாழ்க்கை தொடங்கியது.[4] இந்த படத்தின் பாடல்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றன. இது பாலகிருஷ்ணனின் வழியை எளிதாக்கியது. சித்திக்-லாலின் வியட்நாம் காலனி (1992) வரை அவர்களின் அனைத்து படங்களிலும் பணிபுரிந்தார். சித்திக்-லாலுடன் நான்கு படங்கள் உட்பட 14 படங்களுக்கு இசையமைத்தார். கிலுக்கம்பேட்டி (1991), கிருஹபிரவேசம் (1992), இஷ்டமானு நூறு வட்டம் (1996) ஆகிய படங்கள் இவரது குறிப்பிடத்தகுந்த பிற படங்களாகும். வியட்நாம் காலனிக்குப் பிறகு, ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு ஒரு சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்தார். ஈஸ்ட் கோஸ்ட் விஜயனின் 2011இல் வெளிவந்த மொஹபத் என்ற இசை காதல் படத்தின் மூலம் மீண்டும் திரும்ப வந்தார். ஏ. ஆர். ரகுமான் நிறுவிய இசை நிறுவனமான கே. எம். மியூசிக் கன்சர்வேட்டரியில் ரெக்கார்டர், மேற்கத்திய புல்லாங்குழலுக்கான ஆசிரியராகப் பணியாற்றினார்.[3] இறப்புபுற்றுநோயுடன் நீண்ட காலம் இருந்த பிறகு , சென்னையிலுள்ள தனது வீட்டில் 2019 ஜனவரி 17 அன்று காலமானார். 70 வயதான இவருக்கு மனைவி இராஜலட்சுமியும், ஸ்ரீவத்சன், விமல் சங்கர் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia