ஏகசரண தர்மம்
ஏகாசரண தர்மம் (Ekasarana Dharma)[1] (பொருள்:கிருஷ்ணர் ஒருவரே கடவுள்) என்பது 15-16 ஆம் நூற்றாண்டில் தற்கால வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் சங்கரதேவ் என்பவரால்[2]நிறுவப்பட்ட ஒரு புதிய-வைணவ சமயப் பிரிவாகும். இது வேத சடங்குகளில் கவனத்தை குறைத்து, கிருஷ்ண பக்தி மூலம் குழுவாக நாம ஜெபம் செய்தவதும், கிருஷ்ணர் தொடர்பான கீர்த்தனைகள் பாடுவதிலும்[3] கவனத்தைச் செலுத்துகிறது. அசாம் மாநில மிசிங் மக்கள் ஏகசரண தர்மத்தைப் பின்பற்றுகிறார்கள். ஏகசரண தர்மத்தின் மைய நூல், பாகவத புராணத்திலிருந்து அசாமிய மொழியில் மொழிபெயர்த்து, சங்கரதேவ் எனும் ஆச்சாரியாரியார் இயற்றிய பாகவதம் எனும் நூல் ஆகும் இதனுடன் சங்கரதேவ் மற்றும் மாதவதேவ் இயற்றிய கீர்த்தனைகள் கொண்ட முன்று நூல்களும் உள்ளது. ஏகசரண தர்மம், வர்ணாசிரம அமைப்பைப் பின்பற்றாததும், வேதச் சடங்குகளை விலக்கி வைத்துள்ளது. இது பக்தி இயக்கத்தின் ஒரு பகுதியாக காணப்பட்டாலும், இராதையை கிருஷ்ணருடன் சேர்த்து வழிபடுவதில்லை.. மேலும் இந்த தர்மம் சாதி அமைப்பை எதிர்ப்பதுடன், விலங்கு பலிகளுக்கு எதிராக உள்ளது. இந்த வைணவப் பிரிவு தாஸ்ய பக்தியை கடைப்பிடிக்கிறது.[4] தாஸ்ய பக்தியில் தன்னலமின்றி, கிருஷ்ணருக்கு சேவை செய்யும் ஒரு ஜீவாத்மாவின் பக்தி மிக உயர்ந்த மற்றும் தூய்மையான வடிவமாகக் கருதப்படுகிறது கடவுள் மீதான அன்பின் மேம்பட்ட நிலையில் இருக்கும்போது தாஸ்ய பக்தி இயல்பாகவே வரும். எடுத்துக்காட்டாக இராமாயணத்தில் பரதன், இலட்சுமணன் மற்றும் அனுமான் ஆகியோர் இராமர் மீது கொண்ட பக்தியை தாஸ்ய பக்தி என்று அழைக்கப்படுகிறது. கடவுளின் இயல்புஏகாசரண தர்மம், அருவமான (நிர்குண) கடவுளை ஒப்புக்கொண்டாலும், தனிப்பட்ட முறையில் (சகுண) கிருஷ்ணரை வழிபாட்டிற்குரியவராக அடையாளப்படுத்துகிறது.[5] இது நாராயணனை[6] அடையாளப்படுத்துகிறது.[7] கௌடிய வைணவத்தைப் போலல்லாமல், அத்வைதம் கடவுளுக்கு பயன்படுத்தப்படும் பெயர்களான பிரம்மம், பரமாத்மா மற்றும் பரப்பிரம்மன் இடையே எந்த வேறுபாட்டையும் ஏகசரண தர்மம் மறுக்கவில்லை.[8]ஏகசரண தர்மத்தில் நாராயணனை சில சமயங்களில் விஷ்ணுவுக்கு ஒத்ததாகப் பயன்படுத்தப்பட்டாலும், விஷ்ணு, பிரம்மா மற்றும் சிவன் ஆகிய கடவுளர் கீழ் தெய்வீகத்தன்மை கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.[9] இத்தர்மத்தில் வழிபாட்டுக்குரிய கடவுளாக நாராயணனை ஒரு அன்பான கடவுளாகக் கருதப்படுகிறார், அவர் பக்தர்களை ஈர்க்கும் மங்களகரமான பண்புகளைக் கொண்டவர். அவர் இரட்டையர் அல்லாதவர், சர்வ வல்லமையுள்ளவர் மற்றும் சர்வ அறிவுள்ளவர்; படைப்பாளர், பராமரிப்பவர் மற்றும் அனைத்தையும் அழிப்பவர். அவர் கருணை உள்ளவர், தீனபந்து (எளியவர்களின் நண்பர்), பக்த-வத்சலன் (பக்தர்களின் அன்புக்குரியவர்) மற்றும் பதித-பாவனன் (பாவிகளின் மீட்பர்) போன்ற தார்மீக குணங்களையும் கொண்டுள்ளவர். இது மற்ற கடவுள்களின் இருப்பை மறுக்கவில்லை என்றாலும், கிருஷ்ணன் எனும் நாராயணன் மட்டுமே வழிபாட்டுக்குரியவர் என்றும் மற்றவர்கள் கண்டிப்பாக விலக்கப்பட்டவர்கள் என்றும் வலியுறுத்துகிறது. கிருஷ்ணர்ஏகாசரண தர்மத்தில் பக்தியின் மையப் பொருள் கிருஷ்ணரே. கிருஷ்ணரே அனைத்து கடவுளரை விட உயர்ந்தவர்.[10][11] பிற அனைத்து தெய்வங்களும், கிருஷ்ணருக்கு கீழ்ப்படிந்தவர்களே..[12] இத்தர்மத்தில் கிருஷ்ணர் மட்டுமே உயர்ந்த வழிபாட்டிற்குரியவர். ஆச்சாரியர் சங்கரதேவின் கூற்றுப்படி, கிருஷ்ணர் அல்லது நாராயணர் மட்டுமே உயர்ந்த உண்மை அல்லது பரப்பிரம்மம் மற்றும் விஷ்ணுவின் அவதாரம் ஆவார். கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் ஆவார்.[13] ஜீவன் மற்றும் மோட்ச தத்துவம்ஜீவன் அல்லது ஜீவாத்மா, உருவம் கொண்ட சுயம் நாராயணனைப் போன்றதே.[14]ஜீவாத்மா மாயையால் மூடப்பட்டு துன்பத்தால் அவதிப்படுகிறது.[15]அகங்காரம் அழிக்கப்படும்போது, ஜீவன் தன்னை பிரம்மமாக உணர முடியும்.[16] ஜீவன் அதன் இயல்பான நிலைக்கு மீட்டெடுக்கப்படும் போது (மாயை நீக்கப்படும்போது) ஜீவன் முக்தி (விடுதலை) அடைகிறது. மற்ற வைணவ ஆச்சாரியர்களான இராமானுஜர், மாத்வர், நிம்பர்க்கர், வல்லபாச்சாரியார், சைதன்யர் ஆகியோர் விதேக முக்தியை (இறந்த பிறகு முக்தி) மட்டுமே அங்கீகரித்தாலும், ஏகாசரண தர்ம ஆச்சாரியர்கள் கூடுதலாக சீவ முக்தியை (வாழும் போதே முக்தி) அங்கீகரித்துள்ளனர்.[17] வைணவம் கூறும் ஐந்து வகையான விதேக முக்திகளில்,[18] ஏகாசரண தர்மம் சாயுஜ்யம் வடிவ முக்தியை நிராகரிக்கிறது. கிருஷ்ண பக்தி என்பது முக்திக்கான வழிமுறையல்ல, மாறாக அதுவே மோட்சம் ஆகும். நாராயணனே கிருஷ்ணன்நாராயணனே கிருஷ்ணன் என ஏகசரண தர்மம் வலியுறுத்துகிறது.[19] நாராயணர் என்று பொதுவாக வணங்கப்படுவது கிருஷ்ணரின் வடிவத்தில்தான். கிருஷ்ணரின் விளக்கம் பாகவத புராணத்தில் உள்ளதை அடிப்படையாகக் கொண்டது. அவர் தனது பக்தர்களுடன் வைகுண்டத்தில் வசிப்பவர். பிற வைணவப் பிரிவுகளில் பரவலாகக் காணப்படும் மதுர பாவம்[20] ஏகசரண தர்மத்தில் தனித்துவமாக இல்லை.[21] நான்கு கொள்கைகள்ஏகசரண தர்மத்தின் நான்கு கொள்கைகள்:
மூன்று புனித நூல்கள்ஏகசரண தர்மத்தின் முக்கிய நூல் சங்கரதேவின் பாகவதம். பிற மூன்று நூல்கள் சங்கர்தேவ் இயற்றிய கீர்த்தனை கோஷா மற்றும் மாதவதேவ் இயற்றிய மற்றும் நாம கோஷா மற்றும் இரத்தினாவளி ஆகிய கீர்த்தனை நூல்கள் ஆகும். உட்பிரிவுகள்![]() ஏகசரண தர்மத்தை நிறுவிய சங்கரதேவின் இறப்பிற்குப் பிறகு, மாதவதேவ் இதன் ஆச்சாரியராக செயல்பட்டார். தாமோதரதேவ் மற்றும் ஹரிதேவா ஆகியோர் மாதவதேவை குருவாக ஏற்காததால், அவர்கள் தனியாக பிரம்ம சங்கதி என்ற உட்பிரிவை நிறுவினர். தனக்கு அடுத்த குரு யார் என்ற கூறாது குரு மாதவதேவ் இறந்தார். இதனால் ஏகசரண தர்மததின் மூன்று முக்கிய சீடர்களான பபானிபூரியா கோபால் அதா என்பவரின் தலைமையில் கால சங்கதி என்ற பிரிவும், புருசோத்தம் தாக்கூர் தலைமையில் புருஷ சங்கதி என்ற பிரிவும், மதுரதாஸ் கோபால் தலைமையில் நிகா சங்கதி என்ற பிரிவுகள் நிறுவப்பட்டது.. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia