ஏக்லி ஓவல் அரங்கம்
ஏக்லி ஓவல் (Hagley Oval, ஹேக்லி நீள்வட்ட அரங்கம்) நியூசிலாந்தின் தெற்குத் தீவில் கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஹேக்லி பூங்கா என்னுமிடத்தில் அமைந்துள்ள துடுப்பாட்ட விளையாட்டரங்கமாகும். இங்கு முதன்முதலாக பதியப்பட்டுள்ள ஆட்டம் 1867 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. கேன்டர்பரி துடுப்பாட்ட அணிக்கும் ஒடாகோ துடுப்பாட்ட அணிக்கும் இடையே இந்த ஆட்டம் நடைபெற்றது. அதன்பிறகு 1920 ஆம் ஆண்டுகள் வரை கேன்டர்பரி இதனை அடிக்கடி பயன்படுத்தவில்லை. உள்நாட்டு மாநில அணிகளுக்கிடையேயான புளுங்கெட் கேடய ஆட்டமொன்று முதலில் திசம்பர் 1907 அன்று கேன்டர்பரிக்கும் ஆக்லன்டிற்கும் இடையே நடைபெற்றது.[1] பின்னர் 1979 இல் தான் கேன்டர்பரி திரும்பவும் இங்கு விளையாடியது; 1993ழ94 ஆண்டுகளில் செல் கோப்பை ஆட்டங்களுக்கு இதனைத் தன் தாயக அரங்கமாகக் கொண்டது. இந்த அரங்கத்தில் முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் இசுக்காட்லாந்திற்கும் கனடாவிற்கும் இடையே உலகக்கிண்ண தகுநிலைப் போட்டிகளுக்காக சனவரி 23, 2014 அன்று நடந்தது. இங்கு மூன்று மகளிர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளும் ஆறு மகளிர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளும் நடந்தேறியுள்ளன. 2013இல் இந்த அரங்கை பன்னாட்டு துடுப்பாட்ட நிகழிடமாக மேம்படுத்தும் திட்டத்தை கேன்டர்பரி துடுப்பாட்ட சங்கம் முன்மொழிந்தது; நிரம்ப சர்ச்சைக்குப் பின்னர் சுற்றுச்சூழல் நீதிமன்றம் இதற்கு ஒப்புதல் அளித்தது.[2] 2014இல் நியூசிலாந்தின் எட்டாவது தேர்வுத் துடுப்பாட்ட நிகழிடமாக ஹக்ளே ஓவல் ஏற்கப்பட்டது; இலங்கைக்கு எதிரான பொக்சிங் நாள் தேர்வு ஆட்டம் 2011 நிலநடுக்கத்திற்கு பிறகான கிறைஸ்ட்சேர்ச்சின் முதல் தேர்வாட்டமாக அமைந்தது.[3][4] நடந்தேறிய தேர்வுத் துடுப்பாட்டங்கள்
மேற்சான்றுகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia