இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.
ஏப்பி பர்த்டே டூ யூ, கப்பி பேர்த்டே டு யூ அல்லது ஏப்பி பர்த்டே (Happy Birthday to You) என்பது பிறந்தநாளன்று பாடப்படுகின்ற ஒரு நாடோடிப் பாடலாகும். 1998-ம் ஆண்டு கின்னசு உலக சாதனைகளின் கூற்றுப்படி, "ஏப்பி பர்த்டே டூ யூ" என்ற இந்த பாடல் ஆங்கில மொழியில் அதிக அளவில் அறியப்பட்ட பாடலாக உள்ளது.[1]குட்மார்னிங் டூ ஆல் என்ற பாடலின் அடிப்படையில் ஏப்பி பர்த்டே டூ யூ பாடலும் அமைந்துள்ளது,[2] 1893-ம் ஆண்டு அமெரிக்க சகோதரர்களான பாட்டி இல்லும், மில்ட்ரெட் செ. இல்லும் உருவாக்கியதாகவும்,[3][4] அதற்கான வேறு இசை மெட்டுகளை போட்டதாகவும் கூறுகின்றனர்.[5][6]
செப்டம்பர் 22, 2015, அன்று அமெரிக்க நீதிமன்றம் இப்பாடலை பொது உரிமையின் கீழ் வெளியிட உத்தரவிட்டது.[8]
1935-ம் ஆண்டு முதல் வார்னர்/சேப்பல் காப்புரிமை[9] கொண்டு ஆண்டொன்றிற்கு சுமார் $2 மில்லியன் தொகை பெற்றுள்ளனர். இனிமேல் இக்கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை.[9]
↑Hill;, Mildred J. (music); Hill, Patty S. (lyrics) (1896). "Good Morning to All". Song Stories for the Kindergarten. Illustrations by Margaret Byers; With an introduction by Anna E. Bryan (New, Revised, Illustrated and Enlarged ed.). Chicago: Clayton F. Summy Co. p. 3.{{cite book}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
The Happy Birthday Songபரணிடப்பட்டது 2015-09-26 at the வந்தவழி இயந்திரம் provides access to the "Good Morning and Birthday Song" from the 1927 edition of The Everyday Song Book held by the University of Pittsburgh Library System.