ஏ. சிதம்பரநாத நாடார்ஏ. சிதம்பரநாத நாடார் (A. Chidambaranatha Nadar) ஒரு இந்திய அரசியல்வாதியாவார். முன்னாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இவர் இரண்டு முறை திருவாங்கூர்-கொச்சி சட்ட மன்றத்திற்காகவும், மூன்று முறை சென்னை மாகாண சட்டமன்றத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952–53 ஆண்டுகளில் இவர் மத்திய அமைச்சரவையில் திருவாங்கூர்-கொச்சி தொகுதி அமைச்சராகச் செயல்பட்டார். 1952ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரசு கட்சி சார்பாக இரணியல் தொகுதியிலிருந்து திருவாங்கூர்-கொச்சி சட்ட மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரணியல் தொகுதியானது இரட்டை உறுப்பினர் தொகுதியாகும். இதன் மற்றொறு உறுப்பினர், இதே கட்சியைச் சார்ந்த ஏ. கே. செல்லையா ஆவார்.[1] ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில் மந்திரி சபையில் நில வருவாய் மற்றும் வனத்துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றினார்[2]. இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் 1957 மற்றும் 1962 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] 1967 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia