ஏ. சி. சண்முகம்
ஏ. சி. சண்முகம் (ஆ. சொ. சண்முகம்) என்பவர் தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் தலைவர் ஆவார். இவர் புதிய நீதிக் கட்சி என்ற அரசியல் கட்சியை 2001 ஆம் ஆண்டு தொடங்கினார்.[2] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியின் முன்னாள் உறுப்பினரான ஏ. சி. சண்முகம் இக்கட்சியின் சார்பாக மக்களவை உறுப்பினராக 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 52.93% வாக்கினை பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல்சண்முகம், புதிய நீதிக் கட்சியின் தலைவரும், டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஆவார்.[3] இவர் புதிய நீதிக்கட்சியின நிறுவனத்தலைவர்.[4] வேலூர் பாராளூமன்றத் தொகுதியில் 1984ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2014 தேர்தலில், தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். விவசாய குடும்பத்தில் பிறந்த ஆரணி சொக்கலிங்கம் சண்முகம் என்ற இவர் தொழிலதிபராகவும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும், கல்வியாளராகவும் இருக்கிறார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia