ஏ. பி. அனில்குமார்
ஏ.பி. அனில் குமார் (பிறப்பு 15 மார்ச் 1965) கேரள மாநிலத்தில் சுற்றுலா மற்றும் நலன்புரி அமைச்சராக பணியாற்றினார். இவர் மேலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான நல அமைச்சராகவும் இருந்தார். கேரள சட்டசபை தேர்தலில் வாண்டூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் 2011 சட்டமன்ற தேர்தலில் 28919 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[1][2][3] சுயசரிதைஏ. பி. அனில் குமார் கனகன் சமுதாயத்தில் 15 மார்ச் 1965, கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில். ஏ.பி.பாலன் மற்றும் கே. எல்.தேவகி என்பவருக்கு மகனாக பிறந்தார். அவர் கேரளா மாணவர் ஒன்றியத்தின் மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸின் மாநிலச் செயலாளர் ஆவார். 2001 இல், கேரள சட்டமன்றத்தில் வந்தூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் 2004 ஆம் ஆண்டில் ஓம்மென் சாண்டி அமைச்சகத்தின் சமூக, கலாச்சார மற்றும் இளைஞர் விவகாரங்களில் அமைச்சராகவும், 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் சட்டசபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள வேளாண்மை பல்கலைக் கழகத்தின் 2002-04 ஆம் ஆண்டின் நிர்வாக குழுவில் உறுப்பினராகவும், மாணவர் நலத்துறைக் குழுவின் தலைவராகவும் இருந்தார். இவர் பிரசீஜா என்பவருடன் திருமணம் நடந்தது. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ![]() மேலும் அறிய
வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia