ஐக்கிய நாடுகள் சபையின் கொடி (சின்னம்)![]() ![]() ![]() வெளிர்நீல பின்னணியில் வெள்ளை நிற ஐக்கிய நாடுகள் சின்னம் கொண்ட ஐக்கிய நாடுகள் கொடி அக்டோபர் 20, 1947 முதல் பின்பற்றப்படுகிறது. சின்னத்தின் வடிவமைப்பு இவ்வாறு உள்ளது:
1945ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பாளர்களை அடையாளம் காணுமாறு சின்னம் கொண்ட ஓர் குத்தூசியை வடிவமைக்க விரும்பினர். இந்த தற்காலிக ஏற்பாடு பின்னர் நிரந்தரமான சின்னமாக மாறக்கூடிய வாய்ப்பை உணர்ந்த அமெரிக்க தூதுக்குழுத் தலைவரும் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலருமான எட்வர்ட் ஸ்டெட்டினஸ் ஓலிவர் லுன்ட்குயிஸ்ட் தலைமையில் ஓர் தேர்வுக் குழுவை நிறுவி நிரந்தர வடிவமைப்பைத் தர வேண்டினார். இக்குழு டோனால்ட் மக்லாலின் வடிவமைத்த உலக வரைபடத்தை சைதூண் கிளைகள் தழுவிய நிலையிலான சின்னத்தை தேர்ந்தெடுத்தது.[2][3] கொடியின் பின்னணி வண்ணமாக நீலம் போரைக் குறிக்கும் சிவப்பு வண்ணத்திற்கு எதிராக தேர்ந்தெடுக்கப்பட்டது.[4][5] 1945ஆம் ஆண்டில் பயன்படுத்திய இளங்கருமை நீலத்திலிருந்து தற்போதைய நீலம் மாறுபட்டுள்ளது. அப்போதைய உலக வரைபடமும் மாநாட்டை நடத்தும் அமெரிகக் கண்டத்தை மையமாகக் கொண்டிருந்தது.[6] பின்னர் கொடியில் எந்த நாடும் முன்னுரிமை பெறாதவண்ணம் வரைபடம் மாற்றப்பட்டது. புதிய சின்னத்தில் உலக உருண்டையை மையத்தில் 0° நிலநிரைக்கோட்டையும் மற்றும் பன்னாட்டு நாள் கோட்டையும் கொண்டு இரண்டாக பிளக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. சைதூண் கிளைகள் அமைதியையும் உலக வரைபடம் உலக மக்கள் அனைவரையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. வெள்ளையும் நீலமும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவல்சார் வண்ணங்களாக அறியப்படுகின்றன. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia