ஐசிஐசிஐ புரூடென்சியல் பரஸ்பர நிதி
ஐசிஐசிஐ புரூடென்சியல் மேனேஜ்மென்ட் கம்பெனி லிட். நாட்டில் மிகப்பெரிய சொத்து நிர்வாக நிறுவனங்களில் (ஏஎம்சி) ஒன்றாகும்.[3] இது சேமிப்புகள் மற்றும் முதலீடுகளுக்கு இடையேயுள்ள இடைவளியை குறைத்து எளிய மற்றும் தொடர்புள்ள முதலீட்டு தீர்வுகளின் மூலமாக முதலீட்டாளர்கள் நீண்டகால அடிப்படையிலான செல்வம் சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.[4][5] வரலாறுஏ. தொடக்கம்ஏஎம்சி இந்தியாவில் நன்கு அறியப்பட்ட மற்றும் நிதிச் சேவைகளுக்கான நம்பிக்கையைப் பெற்ற ஐசிஐசிஐ வங்கி மற்றும் யுகேவில் நிதிச் சேவைகள் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக உள்ள புருடென்சியல் பிஎல்சி இடையேயான கூட்டு நிறுவனமாகும். இந்தியா, மும்பை, பாந்திரா குர்லா காம்ப்ளெக்ஸில் கார்பரேட் அலுவலத்தை கொண்டுள்ள ஏஎம்சி 1998–ல் 2 இடங்கள் மற்றும் 6 ஊழியர்களுடன் தொடங்கப்பட்டு பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. தற்போது இந்நிறுவனம் சுமார் 120 இடங்களில் 1000–க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு 1.9 லட்சம் முதலீட்டாளர்களை கொண்டுள்ளது.[6] முழுவதும் முதலீட்டாளரை மையமாக் கொண்ட அணுகுமுறையால், நிறுவனம் இன்று முதலீட்டு தொழிலின் பொருத்தமான கலவை. தகவல்களின் ஆதாரம் மற்றும் செயல்முறை சார்ந்ததாக உள்ளது. நிறுவனம்முக்கியமான நபர்கள்.[7] இயக்குநர்கள் குழு, சொத்து நிர்கவாக நிறுவனம்
நிர்வாக குழு
முதலீட்டு நிர்வாகம்
தயாரிப்புகள் மற்றும் சேவைகள்ஏஎம்சி, சொத்துப் பிரிவுகளில் பரஸ்பர நிதி துறையில் நிர்வாகத்தின் கீழாக உள்ள சொத்துக்களை (ஏயூஎம்) குறிப்பிடத்தக்க வகையில் நிர்வகித்து வருகிறது. மேலும் ஏஎம்சி, சர்வதேச சந்தைகளில் வாடிக்கையாளர்களுக்கான இன்டர்நேஷனல் அட்வைசரி மேண்டேட்களுடன் நாடு முழுவதும் முதலீட்டாளர்களுக்கு போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸ் மற்றும் ரியல் எஸ்டேட் டிவிஷனை வழங்குகிறது.[9][10] பரஸ்பர நிதிபரஸ்பர நிதி அடிப்படையில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது.[11] இது தொடர்ச்சியாக முதலீட்டாளர்கள் தங்கள் வாழ்க்கை சுழற்சியின் குறிக்கோள்களை அடைய உதவும் நிதி தீர்வுகளை வழங்குகிறது. ஐசிஐசிஐ புருடென்சியல் ஏஎம்சி, பரஸ்பர நிதித் திட்டங்களின் நன்கு வேறுபடுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவுக்கு வழிவகுக்கும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. போர்ட்ஃபோலியோ நிர்வாகச் சேவைகள்போர்ட்ஃபோலியோ நிர்வாகச் சேவைகள், உயர் நிகர வருவாய் கொண்ட முதலீட்டாளர்கள் அதிக வருவாயை நோக்கமாக கொண்டு அதிக கவனம் செலுத்தும் போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்ய அனுமதிப்பவை ஆகும். 2000–வது ஆண்டில் ஐசிஐசிஐ புருடென்சியல் ஏஎம்சி இந்த சேவையை வழங்கும் முதல் நிறுவனமாக இருந்து. தற்போது இது 10 ஆண்டுகளுக்கும் மேலான வெற்றிகரமான வரலாற்றைக் கொண்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது.[12] மனை வணிக தொழில்ஐசிஐசிஐ புருடென்சியல் ஏஎம்சி 2007–ம் ஆண்டு ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் சீரீஸ் போர்ட்ஃபோலியோவை துவக்கியதுடன் ரியல் எஸ்டேட் டிவிஷன் உயர் நிகர வருவாய் கொண்ட முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு அமைப்பு ரீதியான முதலீட்டாளர்களுக்கு சேவை செய்கிறது.[13] சர்வதேச ஆலோசனை பிரிவுஐசிஐசிஐ புருடென்சியல் ஏஎம்சி, எங்களிடம் எங்கள் முதலீட்டு திறன்களை சர்வதேச முதலீட்டாளர்களுக்கு நீட்டிக்கச் செய்யக் கூடிய அர்ப்பணிப்புடன் கூடிய வளிநாட்டு ஆலோசனை பிரிவு உள்ளது நிறுவனத்தின் சர்வதேச தொழில் முனைவுகள் தொடர்பான சில முக்கிய புள்ளிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
முக்கிய போட்டியாளர்கள்பரஸ்பர நிதி துறையில் ஐசிஐசிஐ புருடென்சியல் மியூச்சுவல் ஃபண்ட்–க்கான சில போட்டியாளர்களாக எச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட், எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண் மற்றும் யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் உள்ளன.[14] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia