ஐசுவர்யா எண்ணெய் வயல்கள்
ஐசுவர்யா எண்ணெய் வயல் (Aishwarya oil field) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் பார்மர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு என இது கருதப்படுகிறது. வேதாந்தா குழும நிறுவனங்களில் ஒன்றான கெய்ர்ன் ஆற்றல் நிறுவன நிர்வாகிகள் இந்த எண்ணெய் வயலை ஓர் 'உயிருள்ள தெய்வம்' என்று விவரிக்கிறார்கள்.[1][2] 2013 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ஐசுவர்யா எண்ணெய் வயல் தனது உற்பத்தியைத் தொடங்கியது. ஒரு நாளைக்கு 30000 பீப்பாய்கள் என்ற அளவில் இங்கு எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் 200,000 பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி இங்கு எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த எண்ணெய் பயன்பாட்டில் 10% ஆக இருக்கும். ஐசுவர்யா எண்ணெய் வயல் உற்பத்தி உச்ச விகிதத்தில் இருக்கும்போது அதன் உற்பத்தி இந்தியாவின் தற்போதைய எண்ணெய் உற்பத்தியில் சுமார் 30 சதவீதத்திற்குச் சமமாக இருக்கும்.[3] 15 சூன் 2021 முடிய எட்டு ஆண்டு காலத்தில் இந்த எண்ணெய் வயல் மூலம் 54 மில்லியன் பேரல் கச்ச எண்ணெய் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணெய் வயல் இந்திய நாட்டிற்கு $18 பில்லியன் அமெரிக்க டாலர்[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia