ஐசோபென்சான்
ஐசோபென்சான் (Isobenzan) என்பது C9H4Cl8O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். டெலோடிரின் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். 1958 ஆம் ஆண்டுக்கும் 1965 ஆம் ஆண்டுக்கும் இடைபட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இச்சேர்மம் தற்போது பயன்படுத்தப்படுவதில்லை [1]. கரிம வேதியியல் மாசாக மண்ணில் 2 முதல் 7 ஆண்டுகளுக்கு இது நீடித்து நிற்கிறது. மேலும் மனித இரத்தத்தில் ஐசோபென்சானின் உயுரியல் அரைவாழ்வுக் காலம் 2.8 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது [1]. அமெரிக்காவில் இது மிகவும் அபாயகரமான பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஐசோபென்சான் உற்பத்தி, சேமிப்பு அல்லது குறிப்பிடத்தக்க அளவுகளில் பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகளை அந்நாட்டின் அவசரகால திட்டமிடல் மற்றும் சமூக தகவல் அறியும் உரிமை சட்டம் (42 யு.எசு.சி 11002) பிரிவின் 302 ஆம் பிரிவு விதியின்படி கண்காணீக்கப்படுகின்றன [3]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia