ஐநூறும் ஐந்தும்
ஐநூறும் ஐந்தும் (Ayynoorum Ayynthum) என்ற திரைப்படம் தமிழ் மொழியில் வெளிவந்துள்ளது , இதனை எழுதி இயக்கியவர் ஸ்டான்சின் ரகு , இதில் தீபக் சுந்தர்ராஜன் ,சங்கர், சின்னு குருவிலா, லிவிங் ஸ்மைல் வித்யா மற்றும் டி. எம். கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1][2] [3] கதை500 ரூபாய் நோட்டு ஒன்று ஐந்து வெவ்வேறு பாத்திரங்கள் மூலம் விசித்திரமான பயணம் மேற்கொள்வதே கதையாகும். 500 ரூபாய் நோட்டுடன் படம் பயணம் செய்தாலும், அது உண்மையில் 5 முக்கிய கதாபாத்திரங்கள் மீது கவனம் செலுத்துகிறது, அவர்கள் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் எவ்வாறு வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை இப்படம் சொல்கிறது நடிகர்கள்
தயாரிப்புஇந்தப்படம் தயாரிப்பில் பல்வேறு போரட்டங்களைச் சந்தித்துள்ளது. தயாரிப்பாளர்கள் நிதியுதவியை வழக்கமான வழியில் போராடிய பிறகு, ஹாரிசன் ஃபிலிம்ஸ் குழுவிற்கு இன்னும், தங்கள் கதையை படமாக்க போதிய பணம் ஒரு பெரிய தடை இருந்தது. தயாரிக்க முடிவு செய்தவுடன், இயக்குநர் ரகு 15 நாட்களில் இதன் திரைக்கதையை எழுதினார். டி.எம்.கார்த்திக் சீனிவாசன் நடித்த பாத்திரத்தைப் போலவே இந்த படத்தில் நடித்துள்ள வேறு சில கதாபாத்திரங்களும் உண்மையான வாழ்க்கையிலிருந்து ஊக்கம் பெற்றுள்ளனர். இதன் படபிடிப்பு 21 நாட்களில் முடிவடைந்துள்ளது. இதன் ஒரு நிமிட படமுன்னோட்டம் யூடுயூப் இல் வெளியிடப்பட்டது.[4] பணம் இல்லாமல் இந்த உலகம் இயங்குவதற்கான ஒரு கருத்தினை ஊக்குவிக்க ஒரு மராத்தான் போட்டி நடத்தப்பட்டது அதில் சுமார் 150 பேர் பங்கேற்றனர்.[5][6] ஒலித்தொகுப்பு
இப்படத்தின் பாடல்களை எழுதி இசையமைத்தவர் எஸ். ராமானுஜம் மற்றும் எஸ். ரமேஷ்.
விமர்சனம்2012இல் கேரளவின் தலைநகரம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்படவிழாவில் திரையிட வாய்ப்பு பெற்றது, மேலும், 2013இல் ஜெர்மனியில் நடைபெற்ற இந்தியத் திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டது.[7][8][9][10] வெளியீடுஆக்ஸெசபுள் ஹாரிஸான் பிலிம்ஸ் வழக்கத்திற்கு மாறாக திரையரங்குகளில் திரையிடுவதற்கு முன்னால் யுடூயூப் இல் வெளியிட்டது.[11] மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia